செய்திகள்

இந்த 7 உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதா?

22nd Sep 2023 06:08 PM

ADVERTISEMENT


பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்பி உண்ணும் உணவு முட்டை. முட்டை பெரும்பாலானோருக்கு பிடிப்பதற்குக் காரணம், அதனை எந்தச் சுவையிலும் மாற்றிக் கொள்ளலாம்.

வேகவைத்தும் சாப்பிடலாம். காரமாக மசாலா சேர்த்தும் சாப்பிடலாம். அவசரத்துக்கு ஆம்லெட் போட்டுக் கொள்ளலாம். பிரட், தோசை என எல்லாவற்றுக்கும் கச்சிதமாகப் பொருந்திவிடும்.

ஆனால், ஒரு சில உணவுப் பொருள்களை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. 

அவற்றில் முதன்மையாக இருப்பது சிட்ரஸ் வகை பழங்கள். ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களை முட்டை சாப்பிடும் போது சேர்த்து சாப்பிடக் கூடாது. 

ADVERTISEMENT

இனிப்புப் பண்டங்களுடன் சேர்க்கக் கூடாது. பொதுவாக முட்டை ஒரு எளிய காலை உணவாக அமையும். ஆனால் சில வேளைகளில் அதனை இனிப்பான பண்டங்களுடன் காலையில் சேர்த்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் ஒன்று முட்டையை மட்டும், குறைந்த சர்க்கரை கொண்ட உணவுகளோடு சேர்த்து அல்லது ஒட்டுமொத்தமாக தனியா இனிப்பு உணவுகளை சாப்பிடுவது நல்லது.

பல காலமாக முட்டையுடன் பால் எடுக்கக் கூடாது என்று சொல்லி வருகிறார்கள். இது ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே, முட்டை சாப்பிடும் போது சேர்த்து பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சோயா பால் - முட்டை இரண்டுமே அதிக புரதம் நிறைந்த உணவுகள். இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது உடலில் புரதத்தின் சீரற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படும்.

முட்டையுடன், ஊறுகாய் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. அதுபோல, முட்டை சாப்பிடும் போது அதனுடன் தேநீர் குடிப்பதையும் தவிர்த்து விட வேண்டும். சில வேளைகளில் இது வாயுத் தொல்லை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
 

Tags : egg fruits
ADVERTISEMENT
ADVERTISEMENT