செய்திகள்

உடல் எடையைக் குறைக்கும் மூலிகை டீ!

4th May 2023 06:10 PM

ADVERTISEMENT

தற்போது அதிகரித்து வரும் உடல் ரீதியான பிரச்னைகளில் ஒன்றான உடல் எடையைக் குறைக்க பலரும் பலவிதமாக முயற்சிக்கிறார்கள். 

ஆனால், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் முதலில் செய்ய வேண்டியது உணவுக்கட்டுப்பாடுதான் என்கின்றனர் நிபுணர்கள். 

மேலும் இயற்கையாக உடல் கொழுப்பைக் கரைக்கக்கூடிய உணவுகளை சேர்த்துக்கொண்டாலே போதுமானது. 

அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க, தொப்பையைக் குறைக்க மஞ்சள்- புதினா தேநீரை முயற்சிக்கலாம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நீங்கள் அடிக்கடி செய்யும் 5 தவறான பழக்கங்கள்!

ஒரு கப் தண்ணீரை சுடவைத்து அதில் மஞ்சள் ஒரு டீஸ்பூன், 8-10 புதினா இலைகளை போட்டு கொதிக்க விடவும். பின்னர் தேன் சேர்த்து 5 நிமிடம் ஆற வைத்து லேசான சூட்டில் பருகலாம். தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் எடுத்துக்கொள்ளலாம். 

இது கொழுப்பை எரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, பழங்காலத்திலிருந்தே கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது.

புதினா, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, உடல் எடையை குறைக்க உதவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. 

இதையும் படிக்க | டேட்டிங்கில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

ADVERTISEMENT
ADVERTISEMENT