செய்திகள்

ரத்த சர்க்கரையை குறைக்க இதை சாப்பிடுங்க...!

DIN

அதிக நீர்ச்சத்து உள்ள காய்கறிகளில் முதன்மையானது வெள்ளரிக்காய் ஆகும். வெள்ளரிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. 

1. நீரேற்றம் மற்றும் சுத்திகரிப்புக்கு நல்லது

வெள்ளரிக்காயில் 96% நீர் இருப்பதால், அவை நீரேற்றம் மற்றும் சுத்திகரிப்புக்கு ஏற்றதாக அமைகிறது. வெள்ளரிக்காய் உடலின் வழக்கமான நீர் தேவைக்கு உதவுகிறது. இது குளிரூட்டியாகவும் செயல்படுகிறது. வெப்பமான சூழ்நிலைகளில் நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

2. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், அதன் விளைவாக, உருவாகும் இதய நோயின் அபாயம் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

3. செரிமானத்திற்கு நன்மையளிக்கிறது

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரிக்காயில் உள்ள அதிக அளவு நீர், மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் நமது குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.

4. ரத்த சர்க்கரையை குறைக்கிறது

வெள்ளரி ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக நம்பப்படுகிறது. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

5. உடல் எடையை குறைக்க உதவும்

வெள்ளரி  உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. 100 கிராம் வெள்ளரிக்காயில் 15.5 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதில் உள்ள அதிக நீர் செறிவு மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் ஆகியவை உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது.

6. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிடாசின், புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

7. சரும பராமரிப்பு

வெள்ளரிக்காய் சாற்றை சருமத்தில் தடவினால் சருமம் மென்மையாகி பொலிவு பெறும். இது சருமத்தின் மெல்லியக் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. 

வெள்ளரிக்காயில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு அளவோடு உட்கொள்வது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT