செய்திகள்

காய்ச்சல் நல்லதாகவும் இருக்கலாம்: புதிய ஆராய்ச்சியில் தகவல்

DIN

காய்ச்சல் வந்துவிட்டாலே உடனடியாக அதனைக் குறைக்கவும் உடனடியாக காய்ச்சல் நிற்கவும் என ஏராளமான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், காய்ச்சல் என்று வந்தால் அது அதன் வேலையை செய்வதால் உடலுக்கு பல மடங்கு நன்மைகள் கிடைக்கும், மாறாக அதனை நாம் விரைவாக கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் என்கிறது ஆல்பெர்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு.

ஆராய்ச்சிக் குழுவின் தலைவரும், நோய் எதிர்ப்பாற்றல் துறை நிபுணருமான டேனியல் பர்ரெடா, உடனடியாக சிகிச்சை அளிக்காத, மிதமான காய்ச்சல்கள், உடலின் பல்வேறு ஆற்றல்களை புதுப்பித்து, காயங்கள் மற்றும் திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதாகக் கூறுகிறார்.

இயற்கை செய்வதை இயற்கையாக செய்யவிட வேண்டும் என்று கூறும் டேனியல், இந்த ஆய்வில் மிகச் சிறந்த நேர்மறை விஷயங்கள் கிடைக்கப்பெற்றன என்கிறார்.

லேசான காய்ச்சல் ஏற்படும்போது, அது உடலின் சிக்கல்களை சுயமாக சரி செய்யும் நிலையை ஏற்படுத்தும், வேறு எந்த மருந்துகளும் இல்லாமலேயே உடல் காய்ச்சலை குணப்படுத்தும். இருந்தாலும், காய்ச்சலின் போது இயற்கையாகவே மனித உடலுக்குள் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த ஆராய்ச்சி உறுதி செய்யவில்லை என்றாலும், விலங்குகளின் உடலில் காய்ச்சல் ஏற்படுத்தும் உடல்பாகங்களை கண்காணிப்பது, சீரமைப்பது போன்ற வழிமுறைகளை பகிர்ந்து கொண்டதோடு, இதைஒத்த நன்மைகள் மனிதர்களுக்கும் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மிதமான காய்ச்சல் ஏற்படும்போது அதிக வீரியமிக்க மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ளாமல், நோய் எதிர்ப்பாற்றல் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் மூலம், உடலுக்கு சில பல மறைமுக நன்மைகளும் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்குகள் காய்ச்சல் போன்ற உடல் நலக் குறைவுகள் ஏற்படும் போது, அதற்குரிய ஓய்வை எடுத்து உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ள வழிவகுக்கிறது. பிறகு மனிதர்கள் ஏன் எடுத்ததும் காய்ச்சலுக்கு அமைதியாக ஓய்வெடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல், மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்? என்றும் இந்த ஆய்வு கேள்வியெழுப்பியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT