செய்திகள்

விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த புதுவித டிஷ்!

DIN

கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஏதாவது செய்துகொடுக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் சாப்பிட எதையாவது வாங்கிவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால் வீட்டிலிருக்கும் அம்மாக்கள் எப்படித் தப்பிப்பது? ஏதோ ஒன்று செய்தே ஆக வேண்டும். 

கவலையை விடுங்க. பிள்ளைகளுக்கு வித்தியாசமாகவும், அதேசமயம் விரைவாகவும் செய்யக்கூடிய ஃபலாபெல் பால்ஸ் உங்களுக்குக் கைகொடுக்கும். 

மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் பழக்கம் இந்தியர்களிடையே தனி இடத்தைப் பிடித்த விஷயம். ஒருசிலருக்கு மாலை நேரத்தில் காபி, டீ இல்லையெனில் எந்த வேலையும் ஓடாது. ஒரு கப் சூடான தேநீருடன், பக்கோடா, சமோசா, வடை என்று எதையாவது சேர்த்து சாப்பிடுவர். தினமும் ஒரேமாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். அப்படிச் சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கும், வீட்டிற்கு திடீர் வருகைதரும் உறவினர்களுக்கும்  மிருதுவான, க்ரிஸ்பியான ஃபாலாபெல் பால்ஸ் உதவியாக இருக்கும். 

வாங்க ஃபலாபெல் ரெசிபி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..

ஃபலாபெல் மத்திய கிழக்கிந்தியாவின் சுவையான தெரு உணவு. எகிப்தில் மிகவும் பிரபலம். ஃபலாபெல் என்று சொல்லும்போதே ஏதோ புதுவித உணவு என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா... நிச்சயம் புதுவகையான சிற்றுண்டி தான். 

ஃபலாபெல் அரைத்த கொண்டைக்கடலை மற்றும் சுவையான மசாலா கலவையுடன் வறுத்துத் தயாரிக்கப்படும் ஒரு மாலைநேர சிற்றுண்டி. இது வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்கும். இந்த சிற்றுண்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சுவையான சிற்றுண்டியை சமைக்க வெறும் 30 நிமிடங்கள் போதும். வாங்க இதை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம். 

ஃபலாபெல் செய்ய தேவையானவை..

ஊறவைத்த வெள்ளை முழு கொண்டைக் கடலை - 1 கப், வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 கப், 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு, நீளமாக வெட்டிய 3 பச்சை மிளகாய், 2 தேக்கரண்டி கடலை மாவு, தேவையான அளவு சீரகப்பொடி, மிளகாய் பொடி, கான் பிளவர் மாவு, தனியா தூள், மிளகு தூள், சிறிது மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது. 

இந்த பொருட்களின் கவலையாக மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போன்று கரகரவென அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை போல் சுட்டு எடுக்கவும். 

வெளிநாடுகளில் கூபூஸ் என்னும் ரொட்டியுடன் இதை வைத்து சாப்பிடுவார்கள். நாம் மசால் வடை போல் தேநீருடன் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது குழந்தைகளைக் கவரும் வகையில் டொமேட்டோ சாஸ் மற்றும் ஒயிட் சாஸ் வைத்தும் பரிமாறலாம். புதுவிதமாகவும், சுவையானதாகவும் இருக்கும். இந்த கிரிஸ்பியான ஃபலாபெல் பால்ஸை உறவினர்களுக்கு உபசரித்தால், முகமலர்ச்சியுடன், மனமகிழ்ச்சியும் அடைவார்கள். ட்ரை பண்ணிப் பாருங்களேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT