செய்திகள்

நாளைக்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட்? இதோ ஒரு சின்ன பட்டியல்

DIN


நாளைக்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட் என்பது பல வீடுகளில் இரவில் குடும்பத் தலைவிகளும், குடும்ப உறுப்பினர்களும் எழுப்பும் கேள்வி.

இதற்கு பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை என பதில் வரும். இதைக் கேட்டதும் குடும்ப உறுப்பினர்களின் தலை சற்று தொங்கியபடி தூங்கச் சென்றுவிடுவார்கள்.

இந்த தலை தொங்க வேண்டாம். நீங்கள் பதில் சொன்னதும் அவர்கள் குதூகலிக்கத் தொடங்க வேண்டுமா.. அப்படியான பதில் இங்கே இருக்கிறது. இதில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளும் செய்து கொடுத்து அசத்தலாம். செய்வதும் மிகவும் எளிது.

முட்டை கேஜ்ரிவல்
இதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது பிரெட், முட்டை, சீஸ். அவ்வளவுதான். பிரெட்டை எடுத்து இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி தவாவில் நன்கு பொன்னிறமாக்கிக் கொள்ளங்கள். பிறகு பிரெட்டை எடுத்து வைத்துவிட்டு, கொஞ்சம் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த முட்டையை ஆம்லேட் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போதுதான் அந்த சமாச்சாரமே. அதே தவாவில் வறுத்த ரொட்டியை வைத்து அதன் மீது சீஸை துருவி அதன் மேலே ஏற்கனவே செய்து வைத்திருக்கும் முட்டை ஆம்லெட்டை போட்டு இரண்டு முறை திருப்பி எடுத்து விடுங்கள் போதும்.

இதில், முட்டை ஆம்லெட் போடும்போது ஏதேனும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்.

உருளைக்கிழங்கு சாட்
உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
புதினா சட்னி மட்டும் சற்று தண்ணியாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கிண்ணத்தில் நறுக்கிய உருளைக் கிழங்கைப் போட்டு அதில் புதினா சட்னி, தயிர், மிக்சர், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சாஸ் உள்ளிட்டவற்றை தூவுங்கள்.
பிடித்தவர்கள் மிளகு தூள், பொரி, தக்காளி துண்டு, வெள்ளரி துண்டு என எவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம். மிக அருமையான ஒரு டிஷ். பிடித்தவர்கள் தயிர் சேர்க்காமல் முட்டை பொடிமாஸ் போட்டுக் கொடுக்கலாம்.

அவள் மசாலா
சிவப்பு அல்லது வெள்ளை அவள் கொண்டு மிக அருமையான காலை உணவை தயாரிக்கலாம். சற்று தடியான அவளை கொஞ்சம் தண்ணீரில் போட்டு எடுத்து தணியாக வடிகட்டி எடுத்து வைத்து விடுங்கள். அதிக நேரம் விட்டுவிட்டால் கூழாகிவிடும்.

பிறகு ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு, அதில் கடுகு போட்டு, வேர்க்கடலை, முந்திரி சேர்த்து நன்கு பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிறகு இறுதியாக அவளை சேர்த்து மெதுவாகக் கிளறவும். பிடித்தவர்கள் கொஞ்சம் சக்கரை மற்றும் ஒரு சில சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

அவள், மற்ற மாசாலாக்களுடன் நன்கு கலந்ததும் துருவிய தேங்காய், கொத்துமல்லி தூவி இறக்கி உடனடியாகப் பரிமாறவும்.


எலுமிச்சை சாறு
இதுபோன்ற அருமையான காலை உணவுகளுடன் பிள்ளைகளுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு கொடுக்கலாம். பள்ளி செல்பவர்களுக்கு காலை உணவு உண்ட பிறகு பள்ளி சென்றதும் குடிக்க எலுமிச்சை சாறு கொடுப்பது நல்ல பயனைத் தரும். வரும் கோடையை எதிர்கொள்ளவும் உதவும்.

ரொட்டிக்குள்ள முட்டை
ரொட்டிக்குள் இருக்கும் வெள்ளைப் பகுதியை ஒரு வட்ட வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு தவாவில் எண்ணெய் ஊற்றி அந்த ரொட்டியை வைக்கவும். அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து சற்று வெந்ததும் வெட்டியை பகுதியை முட்டை மீது மூடி திருப்பிப் போடவும். இதற்கு எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தினால் ருசி அபாரமாக இருக்கும்.

சப்பாத்தி கெஸடியா
வீட்டில் மதிய உணவுக்காக உருளைக் கிழங்கு வறுவல், காளிபிளஃவர் வறுவல் போல எதையாவது செய்திருந்தால் போதும்.

சப்பாத்தி மாவை பிசைந்து, திரட்டி அதற்கு உள்ளே செய்திருக்கும் வருவலை பரப்பி, அதன் மேல் மற்றொரு மெல்லிய சப்பாத்தியை பேட்டு ஓரங்களை ஒட்டி தவாவில் போட்டு சுட்டுக் கொடுக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT