செய்திகள்

கொழுப்பைக் குறைக்க பயன்படுத்த வேண்டிய  5 வகை எண்ணெய்கள்!

DIN

கொழுப்பைக் குறைக்க இந்த 5 வகை எண்ணெய்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

1. எள் எண்ணெய்

எள் எண்ணெய் மற்றவற்றை விட குறைவான புகை அளவை கொண்டிருந்தாலும், சீரான அளவு கொழுப்பை கொண்டுள்ளது, ஒரு தேக்கரண்டி எள் எண்ணெயில் 5 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 2 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. எள் எண்ணெயை காய்கறிகளை வதக்க பயன்படுத்தலாம்.  

2. கடலை எண்ணெய்

வேர்க்கடலை விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெய் கடலை எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் கடலை எண்ணெயில் கிடைக்கிறது. கடலை எண்ணெயில் அதிக புகை அளவு கொண்டு இருப்பதால் காய்கறிகளை வறுக்கவும், இறைச்சிகளை வறுக்கவும் ஏற்றது. மற்ற எண்ணெய்களைக் காட்டிலும் கடலை எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.

3. ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகம் இல்லாததால்  ஆரோக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும்.  சத்தானது மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளை உள்ளடக்கியது. இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

4. சியா விதை எண்ணெய்

இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கு பங்களிக்கும் சியா எண்ணெயில் ஏராளமாக சத்துகள் உள்ளது. இது மிக அதிக புகையில்லா  அளவு மற்றும் லேசான வதக்குதலுக்கு ஏற்றது. இந்த எண்ணெயில் புரதம், நார்சத்து, வைட்டமின் மற்றும் இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

5. அவகேடோ எண்ணெய்

அனைத்து எண்ணெய்களை காட்டிலும், அவகேடோ எண்ணெயில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது இதய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக, அவகேடோ எண்ணெயில் லுடீன் போன்ற ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால்,  அழகுப் பராமரிப்புக்கு பயன்படுகிறது.

கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இந்த எண்ணெய்களை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். இருந்தாலும் மருத்துவவரின் ஆலோசனை மேற்கொண்டு செயல்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT