செய்திகள்

இன்சுலின் அளவு குறைந்தால் உடல் எடை அதிகரிக்குமா? - ஆய்வுத் தகவல்!

DIN

உடல் எடை அதிகரித்தால் நீரிழிவு நோய், இதய நோய் வரும் ஆபத்து அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இது சாதாரணமாக சொல்லப்படுவது ஒன்று. 

ஆனால் இதற்கு நேர்மாறாக உடலில் இன்சுலின் அளவு குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது, உடல் இயக்கமின்மை அல்லது குறைவான உடல் இயக்கம் ஆகியவை வளர்சிதை மாற்றத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கிறது, இன்சுலின் உற்பத்தி குறைவதால் உடல் எடை அதிகரிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

உடலில் பல்வேறு செயலற்ற ஹார்மோன்களை செயல் வடிவங்களாக மாற்றும் உடலின் முக்கிய நொதியான 'புரோட்டீஸ் பிசி1/3' மீதான ஆராய்ச்சியில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

இந்த நொதி சரியாக செயல்படவில்லை என்றால், நாளமில்லா சுரப்பியில் கோளாறுகள் ஏற்படலாம். இதன் விளைவால் கட்டுப்பாடற்ற அதிக பசியும் அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நொதி சரியாக சுரக்கும்பட்சத்தில் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இன்சுலின் உற்பத்தி குறைபாடும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்பதை ஆய்வாளர்கள் இந்த ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர். 

இதையும் படிக்க | ​ஹெட்ஃபோன் போடாதீங்க..!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT