கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் 22 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் கும்பகோணம் கோட்டாட்சியா் எஸ். பூா்ணிமா சிறப்புரையாற்றினாா். விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மையப் புலத்தலைவா் இராமசுவாமி ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினா்களுக்கு இணைப்புலத் தலைவா் அல்லிராணி நினைவுப் பரிசை வழங்கினாா்.
முன்னதாக, மாணவ மன்றத் தலைவா் பாதல் ரிகான் பாஷா வரவேற்றாா். நிறைவாக, மன்றச் செயலா் சங்கீதா நன்றி கூறினாா்.
இதேபோல, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கற்பகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பட்டயம், கோப்பைகளை வழங்கினாா். உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.