செய்திகள்

காதலர் தினத்தில் 'சிங்கிள்ஸ்' என்ன செய்யலாம்?

DIN

காதலர் தினம்... இன்று(பிப். 14) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதல் பரிசுகள், முத்த பரிமாற்றங்கள் என காதலர்களுக்கு இது கொண்டாட்டமான நாள். ஆனால், சிங்கிளாக இருப்பவர்களுக்கு...? அதிலும் நீண்ட நாள்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு, லவ் செட் ஆகாதவர்களுக்கு சற்று கடினமான நாள்தான். 

ஆனால், காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல, அன்பை வெளிப்படுத்தும் நாளாக எடுத்துக்கொள்ளலாம். உங்கள் குடும்பத்தினரிடம், நண்பர்களிடம் அன்பை வெளிப்படுத்தலாம். உங்களுக்கு பிடித்தவர்களுடன் இந்த நாளை செலவழிக்கலாம். 

காதலர் தினத்தில் சிங்கிள்ஸ் என்ன செய்யலாம்? 

​பயணம் 

பெரும்பாலானோருக்கு பயணத்தைவிட அலாதி மகிழ்ச்சி எதுவுமில்லை. அந்த வகையில் உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு சென்று வரலாம். இயற்கைச் சூழல் நிறைந்த இடத்திற்கு பைக்கில் செல்லலாம். அதிலும் தனிமையில் பயணித்தால் இன்னும் வாழ்க்கையை ரசிக்கலாம். 

டேட்டிங் 

டேட்டிங் என்றவுடன் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்றில்லை. அழகான ஆடை அணிந்து, ஆடம்பரமான உணவகத்திற்குச் சென்று, உங்களுக்குப் பிடித்த உணவை உண்ணுங்கள். சருமப் பராமரிப்பு, ஸ்பாவுக்குச் செல்வது, உங்களை புத்துணர்ச்சி அடையக்கூடிய செயல்களைச் செய்யலாம். படம் பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என பிடித்த விஷயங்களைச் செய்யலாம். 

விருந்து

உங்களுடைய தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விருந்துக்கு அழைத்து கொண்டாடலாம். மேலும் சுவாரசியமான விளையாட்டுகள், அரட்டைகள், டான்ஸ் என நேரத்தை செலவழிக்கலாம்.

சுற்றுலா 

தனிமை விரும்பாதவர்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒரு நீண்ட பயணம் சென்று வரலாம். 

ஓடிடி தளங்கள் 

தியேட்டர் சென்று திரைப்படங்கள் பார்க்கலாம் அல்லது வீட்டிலேயே இருந்து ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்க்கலாம். நீண்ட நாள்களாக பார்க்க திட்டமிட்டிருந்த படங்களை பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT