செய்திகள்

பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!

DIN


பிள்ளைகள் வீட்டில் சேட்டை செய்வது குறைந்து, ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் அல்லது வேலை செய்யும் காலமே பெற்றோருக்கு சற்று மகிழ்ச்சிக் குறைவான காலமாகிவிடும்தான்.

ஆனால், அதே பிள்ளைகள் படித்து முடித்து வேலைக்காகவோ திருமணம் முடிந்தோ வீட்டை விட்டு வெளியேறி வீடுகள் காலியாகும் போது.. வீட்டில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறையும் போது அதனை எதிர்கொள்ள பெற்றோர் பெரிய அளவில் தயாராக வேண்டிய நேரமிது.

உங்களை நீங்களே மௌனமாக இருக்க விடலாம், எதாவது துக்கமான சம்பவங்கள் நினைவுக்கு வந்தால் அழலாம்.. உங்களை நீங்கள் விரும்பும்படி வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான காலமாக இந்த கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும்.

அண்மையில் தனியாக இருக்கும் பெற்றோர்களையும் துணையை இழந்த நபர்களையும் பார்த்திருக்கக் கூடும். சிலர் தங்களது தனிமையை  மிக அழகாகக் கையாள்வார்கள். சிலரோ மிகவும் தடுமாறுவார்கள். ஆரம்பத்தில் சிலருக்கு தனிமையின் மீது புரிதல் இருக்காது. பிறகு புரிந்து கொண்டுவிடுவார்கள். 

பிள்ளைகள் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்பதே பெற்றோருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை அளிக்கலாம். சில வயதானவர்களுக்கு நம்மை கவனிக்கவில்லையே, நம் மீது அக்கறைகாட்டவில்லையே என்ற பெருங்கவலையும் இருக்கும். இது எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

பெற்றோர் ஆகிய உங்களின் கடமைகள் முடிந்து, பிள்ளைகள் வெளியே சென்றுவிட்டார்கள் என்று தனிமையாகவோ, வாழ்க்கை வெறுமையாகிவிட்டதாகவோ உணராமல், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு திட்டமிடலாம். நீங்கள் விட்ட கலையை தொடரலாம். ஏதேனும் படிக்கலாம்.. அருகில் இருக்கும் ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவி செய்வதைக் கூட பெரும்பாலும் நல்லத் தேர்வாகக் கொள்ளலாம். நீங்கள் ஆதரவோ உதவியோ தேடாமல் அதனைக் கொடுக்க முற்படுவதே சிறந்த பழக்கமாக மாறும்.

இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் விரும்பும் விஷயம் ஆனால் உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் இருந்த விஷயம் நிச்சயம் இருக்கும். அவற்றை தூசு தட்டுங்கள். ஒருவேளை சாதனை படைக்கலாம்.

எதுவும் இல்லை என்றால், உங்கள் நண்பர்கள் வட்டங்களை அவ்வப்போது சந்தியுங்கள். பேசுங்கள். மகிழுங்கள். தொடர்ந்து வழிபாட்டுத் தளங்கள் அல்லது பூங்காக்களுக்குச் சென்றாலே உங்களைப் போல தனிமையால் துரத்தப்பட்டவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT