செய்திகள்

பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் அவசியமா? செய்வது எப்படி?

DIN

பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதும், சூடான நீரில் குளிக்க வைப்பதும் பல ஆண்டுகாலமாக இருந்து வரும் பழக்கம். இது வெறும் குளியலோ அல்லது மசாஜோ மட்டுமல்ல அதற்கும் மேல்.

வழக்கமாக குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றனவாம். ஆனால், அதைச் சரியாக செய்வதுதான் மிகவும் முக்கியம். ஏனோ தானோவென்றும் செய்யக் கூடாது.

மசாஜ் செய்யும் போது, செய்யும் உங்களைப் போலவே, குழந்தையும் அதை அனுபவிக்க வேண்டும். அழக் கூடாது. உங்களது அன்பும், அக்கறையும் அந்த மசாஜில் தெரிய வரும்.

சரி இதுவரை குழந்தைகளுக்கு மசாஜ் செய்தே இல்லை. ஆனால் செய்ய விருப்பம் உள்ளது. எப்படி முறையாக செய்வது என்று அறிந்து கொள்ள ஆர்வமும் உள்ளது என்றால்.. இங்கே சில டிப்ஸ்.

உங்கள் குழந்தையின் மிக மகிழ்ச்சியாக செலவிடும் நேரமாக இந்த மசாஜ் செய்யும் நேரம் இருக்கும். இதற்கு இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் அல்லது குழந்தைகளுக்கான மாய்சுரைசர்களைப் பயன்படுத்தலாம். 

கையில் எண்ணெய்யை எடுத்துக் கொண்டு உங்கள் உள்ளங்கைகளை நன்கு உரசுங்கள். இப்போது அதில் ஒரு சூடு ஏற்படும். அப்போது அதனை குழந்தையின் உடலில் தடவத் தயாராக வேண்டும்.

முன்பெல்லாம் காலில் குழந்தையை கிடத்திக் கொள்வார்கள். அதற்கு வசதி இல்லையென்றால், தரையில் மெத்தென்று துணியைப் போட்டு அதன் மீது படுக்க வைத்தும் செய்யலாமாம்.

முதலில், நெஞ்சுப் பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும். நெஞ்சின் நடுப்பகுதியில் இரு கைகளையும் அருகருகே வைத்து அதனை தோள்பட்டைக்கு மிக மெதுவான அழுத்தத்தோடு கொண்டு செல்ல வேண்டும். இதுபோலவே முதுகுப் பகுதியிலும் மசாஜ் செய்யலாம். குழந்தையின் தொடை, கை, கால் என ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி கவனம் எடுத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதமான சூட்டில் குளிக்க வைக்கலாம்.

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..
சீராக தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் போது எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

குழந்தையை தூக்கும் போது அதன் தோள் பட்டை மற்றும் தலைப் பகுதிகளுக்கு ஏற்படும் வலிகள் குறையும்.
உடலுக்கு ஓய்வு கிடைக்கும். 
அதிக நேரம் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
உடல் மற்றும் மன வலிமை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT