செய்திகள்

கேரட் ஜூஸ் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

DIN

கேரட்டை அப்படியே சாப்பிடுவது கடினமாக இருப்பவர்கள் ஜூஸாக குடித்தால் உடலுக்கு நீர்ச்சத்தும் சேரும். 

கேரட்டில் ஏ, பி6, சி, கே1, பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன. மேலும் இதில், ஆன்டி- ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. 

கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். மாலைக்கண் நோய் குணமாகும். 

கேரட்டில் பல வண்ணங்கள் இருந்தாலும் ஆரஞ்சு நிற கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் அதை சாப்பிடுவது நல்லது. 

எலும்புகள் வலுவடைந்து, உறுதித்தன்மை அதிகரிக்கும். ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய்  வரும் அபாயத்தைக் குறைக்கும். 
 
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரையச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது. 

செரிமானத்தைத் தூண்டுகிறது. வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்கிறது. 

சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது. 
 
கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT