செய்திகள்

மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன்... எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?

21st Sep 2022 01:53 PM

ADVERTISEMENT

மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன்... இவற்றில் எதை முதலில் பயன்படுத்த (apply) வேண்டும்? பெரும்பாலாக இன்று அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்தான் இது. 

மாய்ஸ்சரைசர் சருமம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. மேலும் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. 

அதுபோல, சூரிய ஒளியிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களால் சருமப் பிரச்னைகளும் அதிகபட்சமாக தோல் புற்றுநோயும் ஏற்படுகின்றன. இதனால் சன்ஸ்கிரீன் க்ரீம்களைப் பயன்படுத்த தோல் மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமல்ல, அனைத்து பருவகால நிலைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர். 

ADVERTISEMENT

இந்த இரண்டில் எதாவது ஒன்றை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், ஒரேநேரத்தில் இரண்டையும் பயன்படுத்தலாம் என்கின்றனர் தோல் நிபுணர்கள். 

இதையும் படிக்க | டீ அதிகம் குடித்தால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையும்!

சன்ஸ்கிரீனைப் பொருத்தவரை 2 வகையான சன்ஸ்கிரீன்கள் உள்ளன, பிஸிக்கல் (Physical) சன்ஸ்கிரீன் மற்றும் கெமிக்கல் (chemical) சன்ஸ்கிரீன். நீங்கள் பிஸிக்கல் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் முதலில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.  கெமிக்கல் சன்ஸ்கிரீன் என்றால் முதலில் சன்ஸ்கிரீனை போட்ட பின்னர் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். 

அடர்த்தி குறைந்த ஈரப்பதம் கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும்போது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஏனெனில், இப்போது, மாய்ஸ்சரைசரின் பயனும் அடங்கிய சன்ஸ்கிரீன்கள் சந்தைக்கு அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, மாய்ஸ்சரைசரைத் தவிர்த்துவிட்டு நேரடியாக சன்ஸ்கிரீனை மட்டும் பயன்படுத்தலாம். 

மேலும் மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் ஆகிய இரண்டின் தயாரிப்பைப் பொருத்தும் அதன் பண்புகளைப் பொருத்தும் எதனை முதலில் பயன்படுத்த வேண்டும் என்று மாறுபடும். 

இதையும் படிக்க | குறைந்த ரத்த அழுத்தமா? எப்படி சரிசெய்யலாம்?

ஆனால், பெரும்பாலாக சன்ஸ்கிரீன் கடைசியாகப் பயன்படுத்தப்படும் பொருளாகவே இருக்க வேண்டும். 

முதலில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும். மேலும், சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

மாய்ஸ்சரைசர்கள் பொதுவாக ஒவ்வொரு 10-12 மணி நேரத்திற்கும் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.

மறுபுறம், சன்ஸ்கிரீன்கள் உலர்ந்த சருமத்தின் மீது நேரடியாகப் பயன்படுத்தினால் சருமத்தின் வறட்சியை மேலும் அதிகரிக்கும். அதனால் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி சில நிமிடங்களுக்குப் பிறகு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீன்கள் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 

இதையும் படிக்க | இந்த 6 அழகுப் பொருள்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளலாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT