செய்திகள்

பொடுகுத் தொல்லையா? ஒரே சிறந்த வழி இதுதான்!

29th Nov 2022 06:03 PM

ADVERTISEMENT

தலைமுடியைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. சுற்றுச்சுழல் மாசு, மன அழுத்தம் உள்ளிட்ட புறக் காரணிகளாலும் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, கெமிக்கல் நிறைந்த தயாரிப்புகளை முடிக்கு  பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களாலும் தலைமுடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஆகியவை ஏற்படுகிறது. 

தலைமுடியை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை ஏற்படும். குறிப்பாக தலையில் அழுக்கு சேர்ந்தால் பொடுகுத் தொல்லை வரும். பொடுகினால் முடி உதிரும். 

எனவே, வாரத்திற்கு இருமுறையாவது தலைக்கு குளிக்க வேண்டும், தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும், அவ்வப்போது மசாஜ் செய்வது என பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 

இந்நிலையில் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை என முடி சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இருப்பது வெங்காயச் சாறு. 

ADVERTISEMENT

வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அவற்றை அரைத்து சாறு பிழிந்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த சாற்றை தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம். 

வாரம் இருமுறை இவ்வாறு செய்துவர விரைவில் பொடுகுத் தொல்லை போய்விடும். 

வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் கலவை ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்படுகிறது. இது, இள நரையையும் தடுக்கிறது. 

இதையும் படிக்க | அடிக்கடி தலைவலியா? இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!

Tags : hair dandruff
ADVERTISEMENT
ADVERTISEMENT