செய்திகள்

டைப்-2 நீரிழிவு நோயால் யாருக்கு பாதிப்பு அதிகம்?

25th May 2022 01:19 PM

ADVERTISEMENT

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை என கூறப்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது எனவும் கூறப்படுகிறது. 

ஆய்வுகளின் படி, பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் பருவமடைதலில் டெஸ்டோஸ்டிரோன், ஆண்ட்ரோஜன் ஹார்மோன் இருப்பதால் தான் பெண்களை விட ஆண்கள் அதிகம் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. டெஸ்டோஸ்டிரோன் என்பது தசைகள் மற்றும் முடி வளர்ச்சி, குரல் மாற்றங்கள் மற்றும் ஆண்களின் பிறப்புறுப்பு வளர்ச்சி உள்ளிட்டவற்றை தூண்டும் ஒன்றாகும்.

இதையும் படிக்க: நீரிழிவு நோயில் இதய நோய்களை தடுக்கும், கொலஸ்டிராலை குறைக்கும் ‘பழம்புளி’

நீரிழிவு நோயால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது டைப்-2 நீரிழிவு நோயால் தான். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் 90% பேருக்கு டைப்-2 நீரிழிவு நோய் தான் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் டைப்-2 நீரிழிவு நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக டைப்-2 நீரிழிவு நோய் வயதான காலத்தில் தான் ஒருவரைத் தாக்கும். ஆனால் சமீப காலமாக இளம் வயதினரும், சில சமயங்களில் குழந்தைகள் கூட டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

டைப்-2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் எப்போதும் தாகமாக உணர்வது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் கழிப்பது, மிகவும் சோர்வாக உணர்வது, எடை குறைதல், குறிப்பாக தசை அளவு குறைவது, பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமடைதல், கண் மங்கலாக தெரிவது, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது வலி, தூங்குவதில் பிரச்சனை இதுபோன்ற அறிகுறிகள் குறிப்பாக சாப்பிட்ட பிறகு அதிகமாக ஏற்படும்.

ஆனால் ஒருவருக்கு டைப்-2 நீரிழிவு நோய் இருந்தால், மேலே குறிப்பிட்ட அறிகுறிகளைத் தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே டைப்-2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற முடியும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT