செய்திகள்

இளநீர் அதிகம் அருந்தினால் ஆபத்தா?

19th May 2022 06:05 PM

ADVERTISEMENT

'அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு' என்று சொல்வார்கள். இது அனைத்துக்குமே பொருந்தும். 

கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய பானமாக இருப்பது இளநீர். ஒரு இயற்கை பானமாக இருப்பதால் கோடையில் இதன் விற்பனை களைகட்டும். 

இளநீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் உள்ளன. 

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும், கெட்ட கொழுப்புகளை கரைக்கும், ரத்தம் சுத்தமடையும், வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து, உடல் எடையைக் குறைக்கும் என இதன் பலன்கள் ஏராளம். 

ADVERTISEMENT

ஆனால், இளநீர் அருந்துவதனால் சில உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுவது உண்மைதான். 

இளநீர் அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் 

♦ இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த பானம் அல்ல

♦ ஒவ்வாமையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் தவிர்க்கலாம். ஏனெனில் இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். 

♦ சிறுநீரகத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

♦ பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அதிகம் குடித்தால் 'ஹைபர்கெலேமியா' எனும் பிரச்னை ஏற்படும். 

♦ சோடியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படலாம். அதுபோல ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கலாம். 

♦ இளநீர் அதிகம் குடித்தால் செரிமானப் பிரச்னைகளும் ஏற்படும். சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். 

♦ இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் ஆஸ்துமா, சளி, சைனஸ், தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று அருந்த வேண்டும் என்கின்றனர். 

♦ மேலும், இளநீரை வெட்டியவுடன் உடனடியாக குடித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

♦ வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம், ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இளநீரை குடிக்க வேண்டாம்,மேற்குறிப்பிடத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இதையும் படிக்க | இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

ADVERTISEMENT
ADVERTISEMENT