செய்திகள்

பல நன்மைகள் கொண்ட லெமன் கிராஸ் தேநீர்!

DIN

எலுமிச்சைப் புல்(லெமன் கிராஸ்) என்பது இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் விளையும் ஒரு மூலிகையாகும். ஆனால் இப்போது உலகின் பல நாடுகளில் விளைகிறது. இது சமையலில் ஒரு பொதுவான மூலப்பொருளாகும். ஆனால் தேநீர் தயாரிக்க லெமன் கிராஸ் பயன்படுகிறது.

லெமன்கிராஸ் தேநீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


லெமன்கிராஸ் தேநீரின் நன்மைகள்

1. கவலையை நீக்குதல்

லெமன்கிராஸ் தேநீர் கவலையைக் குறைக்கிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்குகிறது. 

2. கொழுப்பை குறைக்கும்

லெமனகிராஸ் தேநீர் கொழுப்பை குறைக்க உதவுகிறது

3. தொற்றுநோயைத் தடுக்கும்

லெமன்கிராஸில் சில தொற்றுநோயைத் தடுக்கும் திறன்கள் உள்ளதால், தொற்றை போக்கப் பயன்படுகிறது. ஹெச்ஐவி போன்ற தொற்று உள்ளவர்களின் பாதிப்பை இந்த மூலிகை பாதுகாக்கிறது.

4. பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாயை சுத்தமாக வைத்திருக்கவும் லெமன் கிராஸ் பயன்படுகிறது. இந்த எலுமிச்சைப் புல்லை(லெமன் கிராஸ்) மென்று சாப்பிடலாம். பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி லெமன்கிராஸ் மூலிகையில் உள்ளது.

5. வலி நிவாரணம்

லெமன்கிராஸ் தேநீர் வலி நிவாரணியாக பயன்படுகிறது. இந்த தேநீரை தொடர்ந்து உட்கொள்ளும் போது வலியை உணராமல் இருக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.

6. இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கும்

2015 ஆம் ஆண்டின் ஆய்வின் முடிவுகள் படி , லெமன்கிராஸ் தேநீரை தொடர்ந்து 30 நாட்களுக்கு குடிப்பதால், ஹீமோகுளோபின் செறிவு மற்றும் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

7. வயிற்று உப்புசம் நீங்கும்

லெமன்கிராஸ் தேநீரை குடிப்பதால்  சிறுநீர் வெளியேறும் பண்பு அதிகரிக்கும். வயிற்று உப்புசம் நீங்கும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT