செய்திகள்

கூகுள் மேப்ஸ் மூலம் சுங்கக் கட்டணத்தை அறியலாம்: எப்படி தெரியுமா?

22nd Jun 2022 12:45 PM

ADVERTISEMENT

இப்போதெல்லாம் பலரும் பக்கத்துத் தெருவிலிருக்கும் கடையைக் கூட கூகுள் மேப்ஸ் மூலமாகத் தேடிக் கொண்டு போகும் அளவுக்கு நாம் அதற்கு அடிமையாகிவிட்டோம்.

வீடு எங்கே, அலுவலக முகவரி என்ன? பஸ் ஸ்டாண்டுக்கு எப்படிப் போக வேண்டும்? அந்தக் கடை எங்க ஏரியாவில் எங்கே இருக்கு? இதுபோன்ற கேள்விகளையெல்லாம் இப்போது யாரும் யாரிடமும் கேட்பதில்லை. ஏனென்றால் கையிலிருக்கும் செல்லிடப்பேசிதான் காரணம். அதனிடம் கேட்டால் சொல்லிவிடும் என்ற எண்ணமே காரணம்.

அப்படிப்பட்ட கூகுள் மேப்ஸ், தொடர்ந்து பல வசதிகளை அதிகரித்துக் கொண்டே, தனது சேவையை மேம்படுத்திக் கொண்டே வருகிறது என்பதும் உண்மைதான்.

அந்த வகையில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது எந்த வழியில் பயணிப்பது, எவ்வளவு தொலைவு, பயண நேரம் உள்ளிட்டவற்றை தெரியப்படுத்திக் கொண்டிருந்த கூகுள் மேப்ஸ், இனி வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எத்தனை, அதற்கான மொத்த கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதையும் தெரிவிக்கும்.

ADVERTISEMENT

இதனை எவ்வாறு அறிந்து கொள்வது?
கூகுள் மேப்ஸ் செயலியை உங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தையும் செல்ல வேண்டிய ஊரையும் சரியாகப் பதிவிடுங்கள். அனைத்துத் தகவல்களுடன், அங்கிருக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டணம் ஆகியவையும் அதில் தெரிவிக்கும் வகையில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டணத்தைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடைவதாக இருந்தால் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் காத்திருக்கிறது. அதுதான். சுங்கச் சாவடி இல்லாத சாலைகள். அதாவது, சுங்கச் சாவடி இல்லாத சாலைகள் அல்லது சுங்கச் சாவடி இருக்கும் சாலைகள் என்ற வாய்ப்பில் ஒன்றை தேர்வு செய்தும் நீங்கள் பாதையைத் தேடலாம். உங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்த விருப்பமில்லை என்றால், சுங்கச் சாவடி இல்லாத பாதையைத் தேர்வு செய்து பயணிக்கலாம். அதற்கு அவாய்ட் டோல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT