செய்திகள்

முகப்பருவால் பிரச்னையா? சரிசெய்ய சில எளிய வழிகள் இதோ!

DIN

முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள், ஒருவரது நம்பிக்கையில் இடையூறை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறதாம். 

ஆனால், இந்த முகப்பருக்களை நீக்க எளிமையான இயற்கையான வழிமுறைகளைக் கையாளலாம். 

முதலில் முகப்பரு எப்படி இருந்தாலும் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதனை கிள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் மேலும் பருக்கள் வர வாய்ப்பு அதிகம். மேலும் நீங்கள் கிள்ளிய இடங்களில் வடுக்களை ஏற்படுத்தும். 

♦கோஜிக் அமிலம், கிளைக்கோலிக் அமிலம், லாக்டிக் அமிலம் அடங்கிய பொருள்களை பயன்படுத்தலாம். இது விரைவாக முகப்பருவை மங்க வைக்கும். வடுக்களை ஏற்படுத்தாது. இந்த அமிலங்கள் நிறைந்த சீரங்கள் தற்போது சந்தையில் அதிகம் கிடைக்கின்றன. 

♦அதுபோல சாலிசிலிக் அமிலம், நியாசினமைடு, கிளைக்கோலிக் அமிலம் அடங்கிய பேஸ்வாஷ்களை பயன்படுத்தலாம். 

♦ முகப்பருக்கள் வடுக்களாக மாறாமல் இருக்க இயற்கை பொருள்கள் அடங்கிய க்ரீம்களை உபயோகிக்கலாம். 

♦அடுத்ததாக முகப்பருக்கள் வராமல் தடுக்கவும் ஒருவேளை வந்தாலும் அது வடுக்களாக மாறாமல் இருக்க உதவுவது சன்ஸ்க்ரீன். முகத்தில் வேறு க்ரீம்களை பயன்படுத்தினாலும் அதற்கு முன்னதாக சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம். 

♦இயற்கைப் பொருள்களை பயன்படுத்தியும் முகப்பருவை நீக்கலாம். பாலை எடுத்து பஞ்சில் நனைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது உருளைக்கிழங்கு சாறு எடுத்து வைக்கலாம். இது முகப்பருவை நீக்குவதுடன் வடுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதுபோல சில பழங்கள், காய்கறிகளையும் பேக்காக போடலாம். 

♦முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை புத்துணர்வாக்கும் 'பீல் ஆப் மாஸ்க்' அவ்வப்போது பயன்படுத்தினால் சருமம் பாதுகாப்பாக இருக்கும். 

♦எனினும் முகப்பருக்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக வந்தாலோ, அதிக வடுக்களை ஏற்படுத்தினாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT