செய்திகள்

முகப்பருவினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுமா? காரணங்களும் சிகிச்சைகளும்!

DIN

முகப்பரு... சாதாரணமாக பூப்படைந்தது முதல் ஹார்மோனில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம்பெண்களுக்கு வர ஆரம்பிக்கிறது. அதன்பிறகு உணவுப்பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசு என பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், இன்று பெண்களுக்கு இருக்கும் முக்கிய அழகுசார்ந்த பிரச்னை இந்த முகப்பரு. அழகு நிலையங்களைத் தாண்டி பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகளும் முகப்பருவை நீக்க பல க்ரீம்களும் சந்தைக்கு வந்துவிட்டன. 

காரணம், விளைவு 

வயது வந்தோருக்கு முகப்பருக்கள் அதிகம் வர, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மரபியல் பிரச்னைகள் ஆகியவை முக்கியக் காரணங்கள். 

இதுதவிர, காமடோஜெனிக்(comedogenic) அதிகமுள்ள அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துவது. இவை சருமத்தின் துளைகளை அடைப்பதால் முகப்பருவை அதிகம் ஏற்படுத்தும். 

மேலும், கார்டிகோஸ்டீராய்டுகள், லித்தியம், வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் போன்ற சில மருந்துகளும் நிலைமையை மோசமாக்கும் என்பது மருத்துவர்களின் கூற்று. 

இதன் விளைவாக, முகம், தாடையின் கீழ், கழுத்தின் மேல் பகுதிகளில் பருக்கள் ஏற்படுகின்றன. 

சிகிச்சை என்ன?

நிலையான சிகிச்சை இல்லை என்றாலும் விளைவுகளைக் குறைக்க சிகிச்சை முறைகள் உதவும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியமான ஒன்று. மாய்ஸ்சரைசர்களும் உதவலாம்.

அடுத்ததாக, உணவுப் பழக்கம், தூக்கம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் அடிப்படை அவசியமானது என்கின்றனர் மருத்துவர்கள். 

எனினும், விளைவுகளைக் குறைக்க, கண்டிப்பாக ஒரு தோல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் முகப்பரு என்பது ஒவ்வொரு காரணங்களால் ஏற்படும். 

முடிந்தவரை, முகத்தை கையில் வைக்கக்கூடாது. இது மிகவும் கடினம் என்றாலும் முகப்பரு இருப்பவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் சிகிச்சை எடுப்பது நல்லது. 

தெளிவான வழிகாட்டுதல் 

மேற்குறிப்பிட்டபடி முகப்பரு ஏன் ஏற்படுகிறது? அதன் விளைவுகள் என்ன? என்பது ஒவ்வொருவருவரைப் பொருத்து மாறுபடும். முகப்பருவின் விளைவாகவும் நடத்தை மற்றும் வாழ்க்கைமுறையில் பாதிப்பு ஏற்படலாம். நம் முகத்தை பற்றியே நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை, கவலை, மனச்சோர்வு, சுற்றியிருப்போரின் மனநிலை பற்றி கவலைகொள்வது உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.  

மீண்டு வருதல் 

முகப்பரு என்பது பதின்ம வயதினரை மட்டுமே பாதிக்கும் என்பதையும் அவர்களை கிண்டல் செய்வதையும் ஒதுக்கிவைப்பதையும் நிறுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

மேலும், பொதுமக்களிடம் இருந்து இந்த எண்ணம் களையப்பட வேண்டும், ஏனெனில் இது பாதிக்கப்பட்டவரிடத்தில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது ஒரு சாதாரணமான ஹார்மோன் பிரச்னை. அனைத்து பெண்களுக்கும் ஏற்படக்கூடியதுதான். இதுகுறித்த விழிப்புணர்வையும் கல்வியையும் மக்களுக்கும் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். 

மலிவு விலை அழகுப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது, இயற்கையான அழகுப் பொருள்களை பயன்படுத்த ஊக்குவிப்பது, வெளியில் செல்லும்போது சருமத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை பெண்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறான மாற்றங்களின் மூலமாக அவர்களிடத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT