செய்திகள்

தலைமுடி வறட்சியா? முடி கொட்டுகிறதா? சரிசெய்ய எளிய வழிகள்!

8th Aug 2022 04:38 PM

ADVERTISEMENT

 

சாதாரணமாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைப் போல தலைமுடியும் வறண்டு போகும். எனவே, குளிர்காலத்தில் தலைமுடியை அதிக கவனத்துடன் பராமரிப்பது அவசியமாகும்.

முடி உதிர்தலுக்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல காரணங்கள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு, எடுத்துக்கொள்ளும் உணவு, மன அழுத்தம், வேறு நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறலாம்.

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில எளிய முறைகளைக் காணலாம். 

ADVERTISEMENT

► முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்தலைக் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். 

► வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த கலவையுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலசி விடவும்.  

இதையும் படிக்க | ஒரு லிப்ஸ்டிக்...5 வழிகளில் பயன்படுத்தலாம்! எப்படி?

► கற்றாழைச் சாறையும் தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். 

► முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம். அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வாரமாக நல்லெண்ணெய், ஒரு வாரம் பாதாம் எண்ணெய், ஒரு வாரம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

► பொடுகினைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து ஸ்கால்ப்பில் படும்படி தெளிக்கவும் அல்லது பஞ்சு கொண்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவலாம். 

► இதேபோல ஆப்பிள் சீடர் வினிகருக்குப் பதிலாக டீ ட்ரீ ஆயிலையும் பயன்படுத்தலாம். 

► குளிர்காலத்தில் குளிப்பதற்கு சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரிலே தலைமுடியை அலச வேண்டும். 

► தலைமுடி வறண்டு போக விடக்கூடாது. முடிந்தவரை லேசாக எண்ணெய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

► தலைக்கு குளித்தவுடன் ஈரத்துடன் சீப்பினை பயன்படுத்தக்கூடாது. 

இதையும் படிக்க | கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT