செய்திகள்

அந்த ஒருநாள்: ஞாயிறன்று என்ன செய்ய வேண்டும்? உழைப்பா? ஓய்வா?

4th Aug 2022 04:34 PM

ADVERTISEMENT


திங்கள்கிழமை காலை எழுந்திருக்கும்போது தலை சுற்றுகிறதா? அப்படியென்றால் உங்களுக்குத் தேவையான மருந்து ஞாயிறன்று முழு ஓய்வு. 

ஆம்.. ஞாயிறன்று அதுவும் வாரத்தில் ஒரே ஒரு நாள் வார விடுமுறை கிடைப்பவர்களுக்கு அது ஒரு பொன்னான நாள். அப்படித்தான் சனிக்கிழமை தோறும் எண்ணுவார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது போல அது ஒரு பொன்னான நாளாக பலநாள்கள் அமைந்திருக்காது. ஏன்?

அன்றுதான் அசைவ உணவுகளை சமைப்பது, வீட்டை சுத்தம் செய்து, ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, கழிவறை சுத்தம் என மாங்கு மாங்கென ஞாயிறு மாலை வரை உயிர் போகும் அளவுக்கு வேலைகளைச் செய்துவிட்டு என்ன அதற்குள் ஞாயிறு போய்விட்டதா என்று அலறுவோருக்கு எப்படி இருக்கும் ஞாயிறு ஒரு பொன்னான நாளாக.

இதையும் படிக்க | என்று மாறும் இந்த நிலை? மகனின் உடலை தோளில் சுமந்துச் சென்ற தந்தை

ADVERTISEMENT

என்னதான் செய்வது? ஒரு வாரத்துக்குத் தேவையான வேலைகளை ஞாயிறன்று செய்ய வேண்டுமா? அல்லது அடுத்த கடினமான வாரத்துக்குத் தயாராக நமது உடலுக்கு ஓய்வளிக்க வேண்டுமா? இன்னும் பலருக்கும் இது குழப்பம்தான்.

ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கொண்டாட வேண்டும்?
மற்றுமொரு கடினமான வாரத்தை எதிர்கொள்ளப் போகிறீர்கள்.. அப்படியானால் ஞாயிறன்று உங்கள் பணிகளைக் குறைத்துக் கொண்டு மனதுக்கும் மூளைக்கும் கூட ஓய்வளிக்க வேண்டும். ஆனால் அப்படியில்லாமல், அதிக வேலைப்பளுவுடன் வார இறுதி நாள்களைக் கழிப்பவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சுரப்பியான கார்டிசோல் அதிகமாக சுரப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபோல ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களின் மூளை, ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் அவதியுறுகிறது. ஏதேதோ வேலைகளைத் தவறவிட்டுவிட்டதாக எப்போதும் ஒரு நினைவை நமது மூளைக்குள் அது நிலைநிறுத்திவிடுகிறது. எனவே, இதற்கெல்லாம் ஒரு உபாயம் உண்டென்றால் அது சன்டே ரீசெட் எனப்படும் முழுமையான ஓய்வு.

ஓய்வென்றால் படுத்தேக் கிடப்பதல்ல. அது பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிக நேரம் உறங்கலாம் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் நீண்ட நேரம் உறங்குவது சிக்கல். ஓரளவு முன்கூட்டியே எழுந்து செய்தே ஆக வேண்டிய சில வேலைகளை மட்டும் பட்டியலிடுங்கள். அதை விரைவாக செய்து முடித்துவிடுங்கள். அதை முடித்ததும் உங்களுக்கு ஒரு திருப்தி வந்துவிடும். அதோடு, உங்கள் நாளை அமைதியாக அனுபவிக்கத் தொடங்குங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் செய்யலாம். புத்தகம் படிக்கலாம். உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்கலாம். பிடித்த நண்பர்களைப் பார்க்கலாம் பேசலாம். உங்களை அழகாக்கிக் கொள்ள நேரம் செலவிடலாம். இசையைக் கேட்கலாம். இது போதுமானது உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள என்கிறது அந்த ஆய்வு.

இவை தவிர, காலியான மளிகைப் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுதல், பெட்ஷீட் மாற்றுதல், துணிகளை துவைக்கப் போடுதல் போன்றவற்றையும் செய்து கொள்வது அடுத்த வாரத்தை வரவேற்க சரியாக இருக்கும் என்கிறார்கள்.
 

 

Tags : sunday rest
ADVERTISEMENT
ADVERTISEMENT