செய்திகள்

ஏசி பயன்படுத்துவோர் கவனத்திற்கு.....உஷார்!

4th Aug 2022 02:13 PM

ADVERTISEMENT

ஏசி(Air conditioner) பயன்படுத்துவோர் அதனை முறையாகப் பராமரித்தல் அவசியம்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏசியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

கண்டன்சர் காயிலில் தூசி, அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமாக தூசி படிந்தால் ஏசி போதுமான வெப்பத்தை வெளியேற்ற முடியாமல், அறையை குளிர்விக்க கடினப்படும்போது, வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக, கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து வெடிக்கக்கூடும்.

வீட்டில் மின்கசிவு ஏற்பட்டாலோ, மின்விநியோகம் சீரற்ற நிலையில் இருந்தாலோ உடனடியாக கவனிப்பது அவசியம். 

ADVERTISEMENT

ஏசி பாரமரிப்பில் கவனிக்க வேண்டியவை

1. ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டெப்லைசர் பயன்படுத்த வேண்டும்.

2. குளிர்காலத்தில் பயன்படுத்தாத ஏசியை பழுதுபார்த்த பிறகே உபயோகிக்க வேண்டும்.

3. அதிக மின்சாரம் தாங்கக்கூடிய தரமான சுவிட்ச், பிளக், கேபிள்களை பயன்படுத்த வேண்டும்.

4. ஏசியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவசியம் பழுதுபார்த்தல் வேண்டும்.

ஏசி பாரமரிப்பில் செய்யக் கூடாதவை

1. பெட்ரோல், டீசலில் இயங்கும் ஜென்செட், இன்வர்டரின் இணைப்பில் ஏசியை பயன்படுத்தக் கூடாது.

2. பெரிய அறைக்கு குறைந்த செயல் திறன் கொண்ட ஏசியை பயன்படுத்துதல் கூடாது.

3. தரமற்ற சுவிட்ச், பிளக், கேபிள்களை  பயன்படுத்தக் கூடாது. 

இதையும் படிக்க| ஏசி, டிவி சுவிட்சை அணைப்பதில்லையா... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT