செய்திகள்

முகப்பருவால் பிரச்னையா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க, போதும்!

3rd Aug 2022 06:19 PM

ADVERTISEMENT

முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் இளம்பெண்களுக்கு மிகப்பெரும் பிரச்னைதான்.

பருவநிலை மாற்றம், உடலியல் செயல்பாடுகளில் மாற்றம், உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது.

முகப்பருக்கள் வந்துவிட்டால் தொடர்ந்து சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவிவிடும். அதனாலே முகப்பருக்களின் மீது கை வைக்கக் கூடாது, அதனை கிள்ளக்கூடாது என்றெல்லாம் கூறுகின்றனர்.

அந்தவகையில் , முகப்பருக்களை விரட்ட மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவிவிட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். 

ADVERTISEMENT

அதேபோன்று ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைத் தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். 

வெந்நீரில் மஞ்சள் போட்டு ஆவி பிடிப்பதும் முகப்பருக்களை விரட்ட உதவும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதால் முகப்பருவை விரட்ட ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 

இதையும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT