செய்திகள்

கரோனா காலத்தில் 'நோயெதிர்ப்பு சக்தி' குறித்து அதிகம் தேடிய இந்தியர்கள்!

19th Jul 2021 06:34 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றுநோய் காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி, ஆன்லைன் கற்றல் குறித்து இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துவிட்டது. ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இந்த பாதிப்புக்கு எப்போது முடிவென்று தெரியவில்லை. முதல் இரண்டு அலைகளைத் தொடர்ந்து மூன்றாவது அலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். 

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் பல. குறிப்பாக உணவு வகைகளில். கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, பாதித்தவர்கள் அதிலிருந்து குணமடைய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் வந்துள்ளது. 

எந்தவொரு வைரஸ் தொற்றும் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமெனில் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை கரோனா பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறது. 

ADVERTISEMENT

நினைத்ததை எல்லாம் பார்த்ததை எல்லாம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இன்று வைட்டமின், புரதம், இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைத் தேடி சாப்பிட்டு வருகின்றனர். இதற்கு கரோனாதான் முழுக்க முழுக்க காரணம் என்று கூறலாம். செயற்கை உணவு முறைகளிலிருந்து மக்கள் படிப்படியாக இயற்கை உணவு முறைகளுக்கும் அலோபதி மருத்துவத்திலிருந்து விலகி, சித்த மருத்துவத்தையும் நாடுகின்றனர். ஏன், கரோனா தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகளை கையாள்கின்றன. 

இந்நிலையில் கரோனா காலத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்டவை குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டதில் உடல்நலம் குறித்த தேடலில் மக்கள் அதிகம் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நிதி முதலீடுகள், ஆன்லைன் கற்றல் முறைகள் ஆகியவை குறித்த தகவல்களை மக்கள் அதிகம் தேடியுள்ளனர்.

ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில் மக்கள் அதிகம் தேடியவை குறித்து 'இன்மொபி' ஆய்வு செய்து 'இந்தியாவில் தேடல் -2021' என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறித்த தேடல் 125 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உடற்பயிற்சி தொடர்பான நடனம் 28 மடங்கு அதிகமாகவும், வீட்டில் உடற்பயிற்சி குறித்து 14 மடங்கு அதிகமாகவும் தேடப்பட்டுள்ளது. 

நிதி முதலீட்டு விருப்பமும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சொத்து மேலாண்மை தொடர்பான தேடல்கள் 13 மடங்கும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொடர்பான தேடல்கள் 12 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. 

மேலும் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் நுகர்வு அதிகரித்துள்ள நிலையில் கரோனா நோய்த்தொற்று இதனை மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கணினி, தொலைபேசிகளில் அதிகம் நேரம் செலவழிப்பதால், இந்த டிஜிட்டல் மாற்றங்கள் தேடல்களை அதிகரித்திருக்கலாம் என இன்மொபி மைக்ரோசாஃப்ட் விளம்பர இயக்குனர் ரோஹித் டோசி தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் வீட்டில் முடங்கியிருப்பதால் ஆன்லைன் டெலிவரி அதிகரித்துள்ளது. கேக் டெலிவரி தொடர்பான தேடல்கள் 15 மடங்கு உயர்ந்துள்ளது. 

அதுபோல திரையரங்குகள் மூடப்பட்டதும், வெளியில் இசை நிகழ்ச்சிகள் இல்லாதிருப்பதும் இணையத்தில் பொழுதுபோக்கு தேடலை அதிகரித்துள்ளன. 

'மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் தொடர்' என்பது இணையத்தில் 28 மடங்கு அதிகமாகவும் 'கிரிக்கெட் லைவ் ஸ்கோர்' 381 மடங்கு அதிகமாகவும் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தேடல்கள் 52 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.

கூடுதலாக, கல்வி மற்றும் ஆன்லைன் கற்றல் தொடர்பான தேடல்களும் 367 சதவிகிதமும்  'பயிற்சி' தொடர்பான தேடல்கள் 103 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. 

இம்மாதிரியான தேடல்கள் மற்றும் ஆன்லைன் உலாவல் தேடல் விளம்பரத்தில் முதலீடு செய்வதை அதிகரிக்க நிறுவனங்களுக்கு வழிவகுத்துள்ளது. கணினி, மொபைலில் தேடல் குறித்த விளம்பரங்களுக்கு டிஜிட்டல் மீடியா 25% செலவிடுகிறது. சில பிராண்டுகள் ஏற்கனவே பெரிய வணிக இலக்குகளை அடைய டிஜிட்டல் ஊடகத்தை மேம்படுத்த தொடங்கியுள்ளன. நிறுவனங்கள் சரியான செய்தியுடன் சரியான பார்வையுடன் வாடிக்கையாளர்களை அடைய தேடல் விளம்பர யுக்தியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று 

ஊடகத்தை மேம்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மற்றவர்கள் சரியான செய்தியுடன் சரியான பார்வையாளர்களை அடைய சிறந்த வாடிக்கையாளர் பயணத்தை உருவாக்க தேடல் விளம்பரத்தை மேம்படுத்தலாம் என ரோஹித் டோசி தெரிவித்தார். 

Tags : coronavirus Immunity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT