செய்திகள்

வெள்ளை சாக்லேட் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?

12th Jul 2021 03:56 PM

ADVERTISEMENT

சாக்லேட்டுகளை பிடிக்காதவர்களை கண்டுபிடிப்பது அரிது. அந்த அளவுக்கு சாக்லேட்டுகளில் எவ்வளவு வகைகள் வந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எப்போதும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. 

ஆனால், சாக்லேட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு பற்கள் சொத்தை ஆகிவிடும் என்றும் பெரியவர்களுக்கு உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள், உடல் எடை அதிகரிக்கும் என்று அளவாக சாப்பிடுகின்றனர். 

ஆனால், டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 

இந்நிலையில் வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும் என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது. வெள்ளை சாக்லேட் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுவதோடு ரத்த சர்க்கரை அளவை சரிசெய்யும் என்று கூறுகின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். 

ADVERTISEMENT

உயிரியலுக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பில் (FASEB) இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாதவிடாய் நின்ற 19 காகசியன் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இதன்படி, 

காலை அல்லது இரவு நேரத்தில் சாக்லேட் உட்கொள்வைதால் எடை அதிகரிக்கவில்லை. 

காலையிலோ அல்லது மாலையிலோ சாக்லேட் சாப்பிடுவது பசி மற்றும் பசியின்மை, மைக்ரோபயோட்டா கலவை, தூக்கம் உள்ளிட்டவற்றை  பாதிக்கும்.

காலையில் அதிக சாக்லேட் உட்கொள்வது கொழுப்பை எரிக்கவும், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவும்.

மாலை/இரவு சாக்லேட் சாப்பிட்ட மறுநாள் உடலில் வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

நாம் சாப்பிடுவது மட்டுமின்றி எப்போது சாப்பிடுகிறோம் என்பதே உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும், எனவே உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் உணவு முறைகளை எடுத்துக்கொள்ளும் நேரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார் ஆய்வாளர் பிராங்க் ஏ.ஜே.எல். ஸ்கீர். 

கலோரி அளவு அதிகரித்த போதிலும் எடை அதிகரிக்கவில்லை. சாக்லேட் சாப்பிடுவதால் பசி எடுப்பதைக் குறைக்கிறது. மேலும் இனிப்புகளை எடுத்துக்கொள்வதையும் குறைப்பதாக ஆய்வாளர் மார்ட்டா கார்லேட் தெரிவித்தார்.

Tags : chocolate obesity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT