செய்திகள்

முகப்பருக்கள் வராமல் தடுக்கும் உணவுகள்!

8th Jul 2021 10:00 AM

ADVERTISEMENT

முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் இளம்பெண்களுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது.

பருவநிலை மாற்றம், உடலியல் செயல்பாடுகளில் மாற்றம், உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது.

முகப்பருக்கள் வந்துவிட்டால் தொடர்ந்து சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும். முகப்பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள் பெரும்பாலோனோருக்கு மறைவதில்லை. 

முகப்பருக்களை விரட்ட குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக்கொண்டால் போதுமானது. 

ADVERTISEMENT

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு தம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. 

பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய ஒமேகா 3 அமிலங்களை கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். 

தினமும் ஒரு கேரட் அல்லது ஒரு தம்ளர் கேரட் ஜூஸ் சாப்பிடலாம். 

கீரை, முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை காய்கறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

கொய்யா, பப்பாளி, மாதுளை உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம். 

இளநீர், மோர் ஆகிய நீர் ஆகாரங்களை குடித்து வரவும். 

உடல் சூடாக இருப்பதால்தான் முகப்பருக்கள் வருகிறது. எனவே. உடல் சூட்டைத் தணிக்கக்கூடிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

கொழுப்பு நிறைந்த உணவுகளையும், எண்ணெய் பொருள்கள், எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

Tags : beauty tips
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT