செய்திகள்

தலைமுடியின் நிறம் மாறுவதற்கு காரணம் இதுதான்!

5th Jul 2021 03:40 PM

ADVERTISEMENT

தலைமுடி நரைப்பதற்கு  மன அழுத்தமே முக்கியக் காரணம் என்று கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

தொழில்நுட்பம் பெருகிவரும் இக்காலத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலையும் மனதையும் சிதைக்கக்கூடிய 'மன அழுத்தம்' எனும் பெரும் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மன அழுத்தத்தினால் படபடப்பு, களைப்பு, மூச்சு வாங்குதல், இதயத்துடிப்பு அதிகரித்தல், வயிற்று உபாதைகள் என உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஒருவரின் முடி நரைப்பதற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இரண்டுக்கும் தொடர்பு இருப்பதை கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

ADVERTISEMENT

தலைமுடி நரைப்பதற்கு மன அழுத்தமே முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள் 'இலைஃப்' (eLife) என்ற இதழில் வெளியிடப்பட்டன.

இதன்படி, முடி கொட்டுவதற்கும், முடி நரைப்பதற்கும் ஒருவரின் மன அழுத்தம் முக்கிய காரணம் என்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமாக முடியின் நிறம் மாறுவதில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். 

கருப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்திற்கு முடி மாறுவதற்கும் மன அழுத்தமே காரணம், மன அழுத்தத்தின் விளைவுகளால் முடியின் நிறம் மாறுவது குறித்த ஊகங்கள் இந்த ஆய்வின் மூலமாக உறுதிப்படுத்தப்படுவதாக ஆய்வின் மூத்த எழுத்தாளர் மார்ட்டின் பிகார்ட் தெரிவித்தார். 

சருமத்தின் கீழே நுண்ணறைகளாக இருக்கும் முடிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றன. உடலும் மனநிலையும் மாறும்போது அவற்றிலும் மாற்றம் ஏற்படுகின்றன. மன அழுத்த ஹார்மோன்களுக்கும் முடிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார். 

உதாரணமாக ஒருவர் வேலையைவிட்டுவிட்டு சுற்றுலா சென்று வந்தபின்னர் சில நாள்களில் அவரது தலையில் புதிதாக முடிகள் முளைத்துள்ளதாக ஆய்வாளர் பிகார்ட் கூறுகிறார். 

முடியில் ஏராளமான புரோட்டீன்கள் உள்ளன. புரோட்டின் அளவு மாறுபடும்போது முடியின் நீளமும் அதன் நிறமும் மாறுகிறது. இது ஒவ்வொருவரின் முடியின் தன்மையை பொருத்தும் மாறுபடும் என்று கூறும் பிகார்ட்,

உங்கள் தலைமுடியின் நிறத்தை மாற்றவில்லை என்றாலும் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைப்பது ஒரு நல்ல குறிக்கோள். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருந்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம். நல்ல உடல்நலத்துடன் கூடிய வாழ்வுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம் என்கிறார்.

Tags : lifestyle stress health
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT