செய்திகள்

'காபி குடிக்கும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது குறைவு'

DIN

அதிகம் காபி குடிக்கும் ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் அபாயம் குறைவு என்று புதிய ஆய்வொன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பி.எம்.ஜே ஓப்பன் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு கூடுதல் காபியும் புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை ஒரு சதவீதம் குறைப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 

சீன மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஷெங்ஜிங் மருத்துவமனையின் சிறுநீரகத் துறை சியோனன் சென் உள்ளிட்ட ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். உலகளவில் இரண்டாவதாக அதிகளவில் உருவாகும் புற்றுநோயாக புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கிறது. ஆண்களில் புற்றுநோய் இறப்புக்கு ஆறாவது முக்கிய காரணமாக இது இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் நான்கில் மூன்று புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கிறது. 1970களில் இருந்து, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஒன்பது கப் வரை காபி குடிப்பவர்களுக்கு  புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 9 சதவீதம் குறைக்கிறது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT