செய்திகள்

உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும் கொத்தமல்லி

DIN

சந்தையில் எளிதாக மலிவாகக் கிடைக்கக்கூடிய பொருள் கொத்தமல்லி. இதில் மாங்கனீசு, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளது. கொத்தமல்லி இலையின் விதை, தழைகள் இரண்டுமே பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. 

► உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை குறையும். 

► ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. 

► வயிற்றுக்கோளாறுகள், ஜீரணத்திற்கு கொத்தமல்லி சிறந்தது. அதிகளவுக்கு ஆண்டி ஆக்சிடன்ட்டுகளை கொண்டது. பல்வேறு வகை புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. 

► கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு பலனளிக்கிறது. கண் பார்வை தெளிவுபெற உதவுகிறது.

► மாதவிலக்கு கோளாறுகளை நீக்குகிறது. 

► நரம்பு மண்டலத்தின் சிறந்த செயல்பாட்டுக்கும், நினைவுத்திறனை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கொத்தமல்லியில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 

► இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் கொத்தமல்லி தழைகளை உணவில் அதிகம் சேர்த்துவர விரைவில் நல்ல பலனைப் பெற முடியும். 

► சருமத்தை மெருகேற்ற உதவுகிறது. 

► சளி, இருமல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உள்ளது. 

► தலைமுடி வளர்ச்சிக்கும், தலைமுடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. 

► உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் பாக்டீரியாக்கள், தொற்றுகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. 

எவ்வாறு பயன்படுத்துவது?

கொத்தமல்லி தழைகளை அப்படியே உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றை துவையல் அல்லது சட்னி செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

வெந்நீரில் சிறிது கொத்தமல்லி தழைகளைப் போட்டு கொதிக்கவைத்து நீரை அருந்தலாம். 

கொத்தமல்லியை அரைத்து சாறாகவும் அருந்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT