செய்திகள்

கோடைக் காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா?

29th Apr 2021 01:19 PM

ADVERTISEMENT

அடிக்குற வெயிலுக்கு வெந்நீர் குடிப்பதா? என்று பலரும் கேட்கலாம். ஆனால், அனைத்து பருவ காலங்களிலும் நாள் ஒன்றுக்கு ஒரு சில தம்ளராவது வெந்நீர் அருந்துங்கள் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். 

கோடைக் காலத்தில் குளிர்ச்சியான நீரை அருந்துவதைவிட வெந்நீரே சிறந்தது என்கின்றனர். 

சாதாரணமாக கோடைக் காலத்தில் நாக்கு வறண்டு காணப்படும். எனவே, குளிர்ச்சியான பானங்களை நாக்கு தேடி ஓடும். இது வழக்கமான ஒன்று தான். 

ஆனால் அப்படி நாக்கு வறண்டு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரையே அருந்த வேண்டும். எந்தவொரு பருவ காலங்களிலும் குளிர்ச்சியான நீரை அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

ADVERTISEMENT

நாக்கு அதிகமாக வறண்டு இருக்கும்போது வெதுவெதுப்பான நீரை அருந்துவது போல, மற்ற நேரங்களில் வெந்நீர் அருந்தலாம். 

பகல் நேரங்களில் வெந்நீர் அருந்த முடியாதவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு தம்ளர் வெந்நீரும், அதேபோல இரவு தூங்குவதற்கு முன்னர் ஒரு தம்ளர் வெந்நீரும் அருந்துவது உடலியல் கோளாறுகளை நீக்கும். 

கோடைக் காலத்தில் வெந்நீர் அருந்தக்கூடாது என்றில்லை. வெந்நீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை அதிகமாகும் என்பதும் உண்மையில்லை. 

கோடைக் காலத்தில் தாராளமாக வெந்நீர் அருந்தலாம். சொல்லப்போனால், கோடையில் வெந்நீர் அருந்துவது உடல் வெப்பநிலையைக் குறைக்கும் என்றே கூறப்படுகிறது. 

உடல் ஆரோக்கியத்தை, அழகை மேம்படுத்தும் 'வெந்நீர்'

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT