செய்திகள்

நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்களில் இந்த வேதிப்பொருள் உள்ளதா?

DIN

தற்போதைய நவீன உலகத்தில் ஆண், பெண் பாடுபாடின்றி அனைவரும் செயற்கை அழகு சாதனப் பொருள்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். விளைவுகள் தெரிந்தும் அதிக ரசாயனக் கலவை கொண்ட அழகு சாதனப் பொருள்களை பயன்படுத்துவோரை நாம் காண முடிகிறது. 

இந்நிலையில், அழகு சாதனப்  பொருள்களில் 'ப்ளூரலிபாக்டர் ஜெர்கோவியா'  (Pluralibacter gergoviae) என்ற பாக்டீரியா இருந்தால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என 'அழகுசாதனப் பொருட்களின் சுகாதாரத்தை மதிப்பீடு செய்யும் அமைப்பான பி.எப்.ஆர். தெரிவித்துள்ளது.

மேலும், 'ரேபெக்ஸ்' என்ற நுகர்வோர் பொருள்களுக்கான எச்சரிக்கை செய்யும் அமைப்பு (RAPEX-rapid alert system for consumer products) கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்த பாக்டீரியாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள 10 அழகு சாதனப் பொருள்களை ரேபெக்ஸ் தரவுத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது. 

'பி ஜெர்கோவியா' என்ற இந்த பாக்டீரியா, தீக்காயங்கள் மற்றும் சவ்வு வழியாக எளிதில் உடலில் நுழைய முடியும். எனவே, இவை உடலில் நுழைந்தால் ஏற்கெனவே உள்ள நமது உடல்நிலையைப் பொருத்து கடுமையான நோய்த்தொற்று உருவாகக்கூடும்.

உடல்நல அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அழகு சாதனப் பொருட்களில் ஜெர்கோவியா பொருளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என பி.எப்.ஆர். வலியுறுத்தி வருகிறது. மேலும், நம்பகமான தரவுகள் இல்லாததால் இவற்றுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை தற்போது அளவிட முடியாது என்றும் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT