செய்திகள்

இதை நம்பி விடியோ கேம் விளையாட முடியுமா?

23rd Sep 2020 03:51 PM

ADVERTISEMENT

லண்டன்: விடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது நல்ல செய்தியாக இருக்கலாம், ஆனால், இதை நம்பி விடியோ கேம் விளையாடவும் முடியாது, பிள்ளைகளை விடியோ கேம் விளையாட அனுமதிக்கவும் முடியாது.

அதாவது, விடியோ கேம் விளையாடும் குழந்தைகள், பின்னாளில் வளர்ந்து பணியாற்றும்போது, அவர்களது பணித்திறன் அதிகரிப்பதாக ஸ்பெயினில் உள்ள யுஓசி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹியூமன் நியூரோசயின்ஸ் மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விடியோ கேம் விளையாடுவதை நிறுத்தியப்பிறகும் கூட, அவர்களது மூளைத் திறனில் ஏற்படும் மாற்றம் தொடர்வது குறித்து அந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 18 முதல் 40 வயதுடைய 27 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் பலதரப்பட்ட விடியோ கேம்களை விளையாடியவர்களும், விளையாடாதவர்களும் இருந்தனர். அவர்களில், சிறுவர்களாக இருந்த போது விடியோ கேம் விளையாடியவர்கள், விளையாடாதவர்களை விடவும் சிறப்பாக பணியாற்றுவது தெரிய வந்திருப்பதாகக் கூறுகிறது ஆய்வு.

ADVERTISEMENT

இதன் மூலம், சிறாராக இருந்த போது விடியோ கேம் விளையாடாத ஊழியர்களின் பணித்திறன் மேம்படுவது போன்றவை குறைவாகவே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களில் விடியோ கேம் விளையாடியவர்களை விடவும், இவர்களது வேகம் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடியோ கேம்கள், நமது திறனை வளர்க்க மிகச் சிறந்த ஆயுதமாக இருப்பதாக ஆய்வில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இது அறிந்தோ அறியாமலோ இளைஞர்கள் ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடியோ கேம் விளையாடுவதை ஊக்குவிக்கு முடியுமா என்பது நமது பிரச்னை.
 

Tags : hot news video game
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT