செய்திகள்

எளிய இயற்கை முறையில் கருவளையத்தை போக்க...

17th Sep 2020 03:53 PM

ADVERTISEMENT

முகத்தில் கருவளையம் இருப்பது பெண்களுக்கு ஒரு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. இது முகப் பொலிவை குறைப்பதால் கருவளையத்தை போக்க பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.

பொதுவாக, கருவளையம் ஏற்படக் காரணம் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது, தூக்கமின்மை, உணவு பழக்கவழக்கம், வைட்டமின் குறைபாடு, உடல் வறட்சி ஆகியவை. தற்போது இரவு நேரத்தில் விளக்கை அணைத்துவிட்டு இருளில் ஸ்மார்ட் போன், லேப் டாப் பயன்பாடும் கருவளையம் மற்றும் கண் பிரச்னைகள் ஏற்பட ஒரு முக்கியக் காரணம். 

எனவே, இருளில் ஸ்மார்ட் போன், டிவி, லேப் டாப் பார்ப்பதை தவிருங்கள். இதுதவிர, சத்தான உணவுகளை சாப்பிட்டு, குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுத்தாலே கருவளையம் நாளடைவில் மறைந்து விடும். விரைவில் மறைய செயற்கையான ரசாயனம் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தாமல் கீழ்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தலாம். 

► கற்றாழை ஜெல்லை எடுத்து கண்களின் கீழ் மற்றும் மேல் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.

ADVERTISEMENT

► ரோஸ் வாட்டர் இயற்கையாகவே சரும பொலிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான காட்டன் துணி அல்லது பஞ்சில் சிரித்துர் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களைச் சுற்றி வைக்கலாம் அல்லது கண்களைச் சுற்றி சிறிது நேரம் ஒத்தனம் கொடுக்கலாம். 

► பாதாம் எண்ணெய் தலை முடிக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. வறட்டு சருமம் கொண்டவர்கள் பாதம் எண்ணெயை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெயுடன் சிறிது தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவி வந்தால் கருவளையம் வெகு விரைவில் மறையும். 

► உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் முகத்தில் கரும்புள்ளிகளை நீக்க உதவும். கண்களை சுற்றி கருவளையம் உள்ள இடத்தில் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை அரைத்து பூசி வர கரு வளையங்கள் மறைந்துவிடும். 

► காபித்தூளுடன் சிறிது தேன் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கண்களைச் சுற்றி தடவி பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அதேபோன்று டீத் தூளையும் இதேபோன்று பயன்படுத்தலாம். 

► வெள்ளரிக்காயை அரைத்து கண்களைச் சுற்றி பேக் போன்று தடவலாம் அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களின் மேல் மற்றும் கீழ் பகுதி படும்படி வைக்கலாம். 

► மிகவும் எளிமையாக ஒரு முறையாக வெறும் தேங்காய் எண்ணெய்/ பாதாம் எண்ணெய்/ ஆலிவ் ஆயிலை கண்களைச் சுற்றி தடவி மசாஜ் செய்து விட்டு தூங்கச் செல்லுங்கள். கண்கள் புத்துணர்ச்சி அடைந்து பொலிவு பெறும். 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT