செய்திகள்

ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கும் சுவர்கள்!

DIN

கரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் கலந்துரையாடல்கள், ஆன்லைன் நேர்காணல்கள் என இணையத்துடனான  தகவல் தொடர்பு பிரபலமாகி விட்டது. இதில், முக்கியமாக குழந்தைகள் ஸ்மார்ட்போன் உபயோகிக்கக்கூடாது என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கட்டுப்படுத்திவந்த நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போனில் வகுப்புகளை கவனிக்கத் தொடங்கிவிட்டனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், ஏழைக் குடும்பங்களில் உள்ள மக்கள் ஸ்மார்ட் போன், இணையம் வசதி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிடுகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள் ஸ்மார்ட்போன் வசதியில்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு உதவிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத மகாராஷ்டிரத்தில் ஜில்லா பரிஷத் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் கர்திலே வகுப்பு எடுக்கிறார். 

'பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகள் வீட்டிலேயே கல்வியைத் தொடர முயற்சிக்கிறோம். கரும்பலகைகள் இல்லாததால் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க சுவர்களை பயன்படுத்துகிறோம். கிராமப்புறங்களில் ஒரு கல்விச்சூழலை உருவாக்குக முயற்சிக்கிறோம். எங்களது 'மிஷன் கணிதம்' என்பது குழந்தைகளுக்கு விளையாட்டுத்தனமான முறையில் எளிதாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் கணிதம் கற்றுக்கொடுப்பது. 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பம்பூர்ணா, பல்லார்பூர், நாக்பிட் மற்றும் பிரம்ஹாபுரி டெஷில்ஸில் உள்ள கிராமங்களின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள சுவர்களில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான கணிதப் பாடங்களை ஜில்லா பரிஷத்தின் கல்வித் துறை அதிகாரிகள் கற்றுக்கொடுக்கின்றனர். 

இந்த வரைபடங்கள் குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் அவர்கள் தங்கள் நண்பர்களுடன் விளையாடும்போது கணிதத்தைக் கற்கிறார்கள். பல்வேறு கணிதக் கருத்துகளைப் புரிந்துகொள்வதும், கல்வி ஆர்வத்தை வளர்ப்பதும், கிராமப்புறத்தில் கல்வியின் ஒட்டுமொத்த சூழ்நிலையை மேம்படுத்துவதுமே எங்கள் நோக்கம்' என கார்டில் கூறினார்.

கோஸ்ரி கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியின் பழைய மாணவரான ஆஷய் வகுல்கர் தனது சொந்த இடத்தில் 'மிஷன் கணிதம்' முறையை முதன்முதலில் தொடங்கினார். அவரது முயற்சியால் இப்போது மாவட்ட அளவில் இந்த புதிய முறையை முன்னெடுத்துள்ளோம்' என்று கர்திலே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT