செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 4,800 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்

16th Sep 2020 01:51 PM

ADVERTISEMENT

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,484 மீட்டர் உயரத்தில் ஐக்கிய அரபு அமீகரத்தின் பிரபல ரஸ் அல் கைமா பகுதியில் ஒரு நவீன உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கே உள்ளது மிகவும் பிரபலமான சுற்றுலா நகரம் ரஸ் அல் கைமா. மலைப்பகுதி என்பதால் இங்கு வழக்கமாகவே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இப்பகுதியில் சுமார் 5,000 அடி உயரத்தில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பதற்கு முன்னரே இதற்கு வரவேற்பு குவிந்துள்ளது. 

இப்பகுதியில் மலைக்கும் பல உயர் சாகசங்கள் நடைபெறும். இதனால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த உணவகம் அமைகிறது. அக்டோபர் மாதம் உணவகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் என்ற பெருமையை இது பெறுகிறது.

இந்த உணவகம் கடல் மட்டத்தில் இருந்து 1,484 மீட்டர் (4,868 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ் சாகச மையத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. மலைத்தொடரின் இடையே மிகவும் ரம்மியமான சூழலில் இந்த உணவகம் அமைகிறது. உணவகத்திற்கு வருவோருக்கு ஒரு இனிமையான அனுபவம் கிடைக்கும் என்று கூறுகிறார் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலிசன் கிரின்னெல். 

ADVERTISEMENT

'மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம் கண்டிப்பாக வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்' என்றார். 

Tags : hotel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT