செய்திகள்

'பிடித்த நிறங்களைக் கொண்டு உணர்ச்சிகளை மதிப்பிடலாம்' - புதிய ஆய்வில் உறுதி

14th Sep 2020 02:11 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் உள்ள மக்கள் வண்ணங்களுடன் தங்களது உணர்ச்சிகளை இணைக்கின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இருந்தாலும் அனைவரிடமும் வண்ணங்கள் தொடர்பான ஒத்த உணர்வுகள் இருக்கின்றன. 

ஆறு கண்டங்களில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,598 பங்கேற்பாளர்களுடன் சர்வதேச ஆய்வுக்குழு நடத்திய ஆய்வு உளவியல் இதழில் வெளியிடப்பட்டது.

'வண்ணங்களுடன் தொடர்புடைய உணர்ச்சிகள்' குறித்து எந்த ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என ஜோகன்னஸ் குட்டன்பெர்க் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டேனியல் ஓபர்பெல்ட்-ட்விஸ்டல் கூறினார்.

மேலும், இந்த ஆய்வு மனித உணர்ச்சிகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தைப் பெறவும், உலகெங்கும் மக்களுக்கு வண்ணத்தை ஒத்த உணர்வுகள் ஒன்றாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் உதவியது என்றார்.

ADVERTISEMENT

ஆய்வில் பங்கேற்பாளர்கள் 20 உணர்ச்சிகளை 12 வெவ்வேறு வண்ணங்களில் குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும், வண்ணச் சொல்லை உணர்ச்சியுடன் தொடர்புபடுத்திய தீவிரத்தை குறிப்பிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதில், சிவப்பு நிறம் என்பது ஒரு நேர்மறையான உணர்வு. காதல் மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் வலுவாக தொடர்புபடுத்தும் ஒரு வண்ணமாக உள்ளது. ப்ரவுன் கலர் குறைந்த உணர்ச்சிகளை கொண்டதாக உள்ளது. 

மேலும் நாடுகளைப் பொறுத்து சில வண்ணங்களின் உணர்ச்சிகள் மாறுபட்டன. வெள்ளை நிறத்தின் நிறம் மற்ற நாடுகளை விட சீனாவில் சோகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. கிரேக்கத்தில் ஊதா நிறம் சோகத்துடன் தொடர்புடையதாக இருந்தது. 

சீனாவில் இறுதிச் சடங்குகளில் வெள்ளை ஆடைகள் அணியப்படுவதாலும், துக்க காலங்களில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் இருண்ட ஊதா நிறம் பயன்படுத்தப்படுவதாலும் இது இருக்கலாம் என்று ஓபர்பெல்ட்-ட்விஸ்டல் விளக்கினார்.

அதேபோன்று கால நிலையுடன் ஒப்பிடுகையில், குறைந்த சூரிய ஒளியைக் காணும் நாடுகளில் மகிழ்ச்சிக்கு மஞ்சள் மிகவும் நெருக்கமாக தொடர்புடையதாக இருந்தது. 

டாக்டர் டேனியல் ஓபர்ஃபெல்ட்-ட்விஸ்டலின் கூற்றுப்படி, உலகளாவிய ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளுக்கான காரணங்கள் என்னவென்று சரியாகச் சொல்வது தற்போது கடினம். மொழி, கலாச்சாரம், மதம், காலநிலை, மனித வளர்ச்சியின் வரலாறு, மனித புலனுணர்வு அமைப்பு ஆகியவற்றுடன் வண்ணங்கள் குறித்த பல அடிப்படை கேள்விகள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT