செய்திகள்

'பொருந்தா உணவு விளம்பரங்களில் அதிகளவில் குழந்தைகள்'

DIN

யூ டியூப் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் பொருந்தா உணவுகளை விளம்பரப்படுத்த குழந்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

விளம்பரங்கள் உணவுப் பொருள்களின் மார்க்கெட்டிங்கிற்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. எந்த ஒரு பொருளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கவர்ச்சியான ஆதாரமாக விளம்பரங்கள் இருக்கின்றன.

நிறுவனங்களும் அதற்கேற்ப விளம்பரத்திற்கென்று அதிகமாக செலவு செய்கின்றன. உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான உணவுகளை விற்பனை செய்கின்றன. அந்தவகையில், நுகர்வோரின் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு ஏற்ப, ஆன்லைன் விளம்பரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில், 'ஜங்க் புட்' எனும் பொருந்தா உணவுகளை விளம்பரப்படுத்த, குழந்தைகள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் இது பொருள்களின் விற்பனைக்கு பெரிதும் உதவுதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் 'ஜர்னர் பீடியாட்ரிக்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

குழந்தைகள் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் மூலமாக பல ஆயிரம் உணவு விளம்பரங்களைப் பார்க்கிறார்கள். இந்த விளம்பரங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கும் என்று என்.ஒய்.யூ ஸ்கூல் ஆஃப் குளோபல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் சுகாதார ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர் மேரி ப்ராக் கூறுகிறார். ஆரோக்கியமான உணவை நுகர்வோர்கள் எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்தும் டிஜிட்டல் மீடியா சூழல்தான் தங்களுக்குத் தேவை என்கிறார். 

உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் இரண்டாவது வலைத்தளம் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கு இடமாக யூடியூப் இருக்கிறது. பெற்றோர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் குழந்தையை யூடியூப் பார்க்க அனுமதிக்கின்றனர். மேலும் 35 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தை யூடியூப்பை தவறாமல் தினமும் பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

வரும் ஆண்டுகளில் யூடியூபின் தாக்கம் இன்னும் வலுவாக இருக்கலாம், ஏனெனில் பல பெற்றோர்கள் குழந்தைகளைப் பிரிந்து வெளியூர்களில் வேலை செய்கிறார்கள், அல்லது அவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் செலவழிக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. மேலும், கரோனா காரணமாக குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் சவாலான பணியை பெற்றோர்கள் கையாள வேண்டியுள்ளது. 

இதில் பொருந்தா உணவுகளின் விளம்பரத்துக்காக சிறு குழந்தைகள் தோன்றும் விளம்பரங்கள் அதிகம் பெற்றோர்களால் ஈர்க்கப்படுகிறது. முக்கியமாக யூடியூப் வீடியோக்களின் மூலமாக பிரபலமடைவோர், விளம்பர நிறுவனங்களை பெரிதும் ஈர்த்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கும் நபராக யூடியூப் பிரபலம் 8 வயது சிறுவன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 26 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். 

பொருந்தா உணவு மற்றும் பானங்களை ஊக்குவிப்பதற்காக பெரும்பாலான உணவு நிறுவனங்கள் குழந்தைகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படுவதால் பெற்றோர்களும் அதனை கவனிக்கின்றனர். 

இந்த ஆய்வுக்காக, ப்ராக் மற்றும் அவரது நண்பர்கள் 2019 ஆம் ஆண்டின் யூடியூப்பில் மிகவும் பிரபலமான ஐந்து குழந்தைகளை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் வயது 3 முதல் 14 வயது. அதில் உணவு விளம்பரங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. பின்னர் அந்த விளம்பரங்களில் காண்பிக்கப்பட்ட உணவுகளின் தரத்தை மதிப்பிட்டதில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை பொருந்தா உணவு, பானங்கள் அல்லது துரித உணவுகள் என்று கண்டறியப்பட்டது. அதில் பெரும்பாலானவை 'ஜங்க் புட்' எனும் பொருந்தா உணவுகளாக இருக்கின்றன. ஆனால், இதுதொடர்பான விடியோக்கள் அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. 

குழந்தைகளையே பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்கள் யூடியூப் விடியோக்களில் அதிக அளவு பொருந்தா உணவுகளை ஊக்குவித்து வருகிறார்கள், ஆனால் இந்த பொருந்தா உணவுத் தயாரிப்புகளையே மக்கள் அதிக நேரம் செலவழித்து பார்க்கின்றனர் என்றும் ப்ராக் கூறினார்.

சிறு குழந்தைகளும், பெற்றோரும் பொருந்தா உணவுகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதனால் இவை பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

மேலும், உணவு விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள் அதிக கலோரிகளை உட்கொள்கின்றன. அதனால்தான் தேசிய மருத்துவ அகாடமி மற்றும் உலக சுகாதார அமைப்பு உணவு சந்தைப்படுத்துதலை 'குழந்தை பருவ உடல் பருமனின் முக்கிய இயக்கி' என்று அடையாளம் காட்டுகிறது.

எனவே, இம்மாதிரியான பொருந்தா உணவுகளை விளம்பரப்படுத்துதலை நிறுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் இதன் மூலமாக வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT