செய்திகள்

மன அழுத்தத்தைக் குறைக்கும் 'சீத்தாப்பழம்'

DIN

'கஸ்டர்டு ஆப்பிள்' என்று சொல்லக்கூடிய சீத்தாப்பழம் மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. 

பொதுவாக ஒரு சில பழங்கள் சீசன் நேரத்தில் மிகவும் விலை குறைவாக கிடைக்கும். அந்த வகையில் தற்போது சீத்தாப்பழம் சீசன் ஆரம்பித்துவிட்டது. இந்த சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். 

சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் உள்ளது. இதையனைத்தையும் விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. 

மேலும், இதில் உள்ள தாதுப்பொருள்கள் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. 

ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும் சீத்தாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். ரத்த அழுத்தம் சீராக இருப்பதனால் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும். 

சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல், வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும்.

மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் கூட ஒரு சீத்தாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மன அழுத்தத்தை சரிசெய்து நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. 

கண் பார்வைக் கோளாறுகளை நீக்கும் தன்மை சீத்தாப்பழத்திற்கு உள்ளது. 

சரும வறட்சி உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 

மற்ற பழங்களை விட சீத்தாப் பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமச்சத்துகளும் இருப்பதாலும், தற்போது சீசன் நேரம் என்பதாலும் இதனை அதிகமாக உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT