செய்திகள்

'மனித மூளைக்கும், கணினிக்கும் உள்ள ஒற்றுமை' - ஆய்வில் கண்டுபிடிப்பு

DIN

மூளை மற்றும் கணினிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சியில் இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

உயிரியலில் தொடர்பான ஒரு புதிய ஆய்வில், மூளையின் பார்வை தொடர்பான பாதையில் வி4(V4) பகுதியில் உள்ள நியூரான்கள் 3டி வடிவத்தில் பொருள்களை ஆராய்கின்றன என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஆனால், மூளையின் இது தொடர்பான ஆய்வில் கடந்த 40 ஆண்டுகளாக 2டி வடிவங்களைத் தான் வி4 பகுதி அதிகம் ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. 

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செயற்கை நியூரான்களும் 3டி வடிவத்தில்தான் பொருள்களை ஆராய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, கணினியின் பார்வை வலையமைப்பான அலெக்ஸ்நெட்டின் ஆரம்ப கட்டத்தில் 3டி வடிவம் முன்கூட்டியே கண்டறியப்படுகிறது. 

மூளையின் வி4 பகுதியின் முற்பகுதியில் 3டி வடிவத்திற்கான வலுவான, தெளிவான சமிக்ஞைகளைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக நியூரோ சயின்ஸ் பேராசிரியரும் ஜான்வில் க்ரீகர் மைண்ட் நிறுவனத்தின் இயக்குநருமான எட் கானர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுக்கான நீண்டகால சவால்களில் ஒன்று மனித பார்வையை பிரதிபலிப்பது. அலெக்ஸ்நெட் போன்ற ஆழமான (மல்டிலேயர்) நெட்வொர்க்குகள், கேமிங்கிற்காக உருவாக்கப்பட்ட 'கிராபிக்கல் ப்ராசஸிங் யூனிட்ஸ்(GPU)' மற்றும் படங்களை தெளிவாக ஆராயப் பயன்படுகின்றன. 

அந்த வகையில் இந்த ஆய்வில் ஒரு பொருளை ஆராயும் பார்வையில், கணினியும், மனித மூளையும் ஒத்த பதில்களை தருவதாக ஆய்வாளர் கானர் கூறுகிறார். ஏன், மூலையில் உள்ள நெட்வொர்க்குகளின் அடிப்படையிலே கணினியில் அலெக்ஸ்நெட் போன்ற நெட்வொர்க்குகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறும் அவர், இயற்கை மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான எதிர்கால வாய்ப்புகளை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டக்கூடும் என்றார். 

செயற்கை நுண்ணறிவை இயற்கை நுண்ணறிவுக்கு நெருக்கமாக கொண்டுவருவதற்கான உத்திகளின் சிறந்த ஆதாரமாக மூளை உள்ளது என்றும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT