செய்திகள்

மாசில்லா தீபாவளி: மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள்

20th Oct 2020 01:33 PM

ADVERTISEMENT

மாட்டுச் சாணம் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களைக் கொண்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண்கள்.

பண்டிகைக் காலங்களில் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் குறைக்கும் வகையில் ரசாயனத்தைத் தவிர்த்து இயற்கைப் பொருள்களை பயன்படுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் அமைச்சகம் முதல் சமூக அமைப்புகள் வரை வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் வரும் நவராத்திரி விழா, தீபாவளிப் பண்டிகை வரவுள்ள நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில், மாட்டுச் சாணம் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களைக் கொண்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ராஜஸ்தான் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். 

பாரம்பரிய மண் விளக்குகளைத் தவிர சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் இதுபோன்ற விளக்குகளை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளூர் தயாரிப்புக்கான முயற்சியாகவும் இது இருக்கும் என்கின்றனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து அங்குள்ள பெண்கள் கூறும்போது, 'எங்களது பாரம்பரிய மாட்டுச் சாணம் தூய்மையானது. ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட பெண்கள், 1,000-க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளைத் தயாரிக்கின்றனர். பண்டிகைகளை கொண்டாட உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்று தெரிவித்தனர். 

 

Tags : தீபாவளி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT