செய்திகள்

உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்!

19th Oct 2020 12:45 PM

ADVERTISEMENT

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உடல் எடையைக் குறைக்க பலர் பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். சாதாரணமாக உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று மட்டுமில்லாமல், உடல் பருமன் கொண்டவர்கள் பலர் மருத்துவமனைகளை நாடுகின்றனர். உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை வரை நவீன உலகம் முன்னேறியுள்ளது. ஆனால், இவையெல்லாம் பிற்காலத்தில் உடல்ரீதியாக பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். 

மாறாக, நம் உணவில் சிலவற்றை தவறாது சேர்த்துக்கொண்டு வந்தாலே உடல் எடையைக் குறைக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையை குறைப்பதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்றாலும், இது உடலுக்கு நல்லது தானே தவிர எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தாது. 

உடல் எடையை குறைக்கக்கூடிய கீழ்குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைக்கலாம். 

► முட்டை, மீன்

ADVERTISEMENT

► கீரைகள் குறிப்பாக பசலைக்கீரை

► பிராக் கோலி, முட்டை கோஸ் வகை காய்கறிகள்

► மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, பேரிக்காய், தர்பூசணி, கிர்ணி, அத்திப்பழம் உள்ளிட்ட பழங்கள் (மா, பலா, வாழையைத் தவிர மற்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்) 

► சிக்கன் மார்புப் பகுதி, மெல்லிய மாட்டிறைச்சி

► வேகவைத்த உருளைக்கிழங்கு 

► கேரட், வெள்ளை பீன்ஸ், சோயா பீன்ஸ்

► பருப்பு வகைகள் குறிப்பாக பாசிப்பருப்பு, முளைகட்டிய தானியங்கள் 

► சூப் வகைகள்

► அவோகேடோ பழம், முலாம்  பழம், ப்ளூபெர்ரி, திராட்சைப் பழம்

► ஆப்பிள் சீடர் வினிகர்

► ஓட்ஸ்

► நட்ஸ் வகைகள் குறிப்பாக வால்நட்ஸ்

► தேங்காய் எண்ணெய்

► இளநீர், மோர், மூலிகை தேநீர், பிளாக் டீ, க்ரீன் டீ

► சமைக்கும்போது மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். 

► முடிந்தவரை வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, தேன் சேர்த்துக்கொள்வது நல்லது. 

 

Tags : lifestyle
ADVERTISEMENT
ADVERTISEMENT