செய்திகள்

நினைவுத் திறனை அதிகரிக்க, மனச்சோர்வைக் குறைக்க...

DIN

கீரைகளில் ஒவ்வொன்றும் தனித்துவ தன்மை கொண்டது. அதில் வல்லாரை கீரை என்று கூறினாலே நமக்கு நினைவுக்கு வருவது நினைவாற்றல் தான். ஆம், மூளையின் துரித செயல்பாட்டுக்கு, நினைவுத் திறனுக்கு வல்லாரை கீரை பெரிதும் பயன்படுகிறது. 

வல்லாரை கீரையின் குறிப்பிடத்தக்க மருத்துவ பயன்கள் என்னவென்பதை பார்க்கலாம். 

பொதுவாக நீர்ப்பரப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் எளிதாக படர்ந்து வளரும் வல்லாரை கீரையை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூளையின் உள்ள நரம்புகளின் செயல்பாட்டினைத் தூண்டி நினைவுத் திறனை மேம்படுத்தும். இதனால் அல்சைமர் நோய் வருவதைத் தடுக்க முடியும். 

மேலும், வல்லாரைக் கீரையை தொடர்ந்து உண்பதால் மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.

வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசி வர எளிதில் ஆறும். யானைக்கால் வியாதி இருப்பவர்கள் வல்லாரை இலையை அரைத்து போட்டு வர வலி குறையும்.

மேலும், வல்லாரை உடல் வெப்பத்தைக் குறைக்கும். உடல் பலம் பெறும். அனைத்துவிதமான வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்லாரை பயனப்டுகிறது. இதனால் செரிமானம் சீராக நடைபெறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வல்லாரை பொடியுடன் நாட்டுச் சக்கரை அல்லது தேன் கலந்து சாப்பிடலாம். 

மாதவிடாய்க் காலத்தில் வல்லாரைச் சாற்றுடன் வெந்தயத்தை குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு வலி, இடுப்பு வலி குறையும். 

வல்லாரை இலைச் சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் ஞாபகசக்தி, சுறுசுறுப்பு கூடும்.

கண் எரிச்சல், கண் கோளாறுகளுக்கும் வல்லாரை சிறந்தது. சருமப் பிரச்னை, உடலில் புண் இருப்பவர்களும் வல்லாரை கீரையை அரைத்துப் பற்று போட விரைவில் சரியாகிவிடும். 

ஆனால், உடலுக்கு நல்லது என்று கூறி வல்லாரை கீரையை அதிகளவு எடுத்துக்கொள்ளக் கூடாது. மூளையில் உள்ள செல்களை அதிகம் தூண்டும் திறன் கொண்டதால் வலிப்பு நோய் உள்ளவர்கள் வல்லாரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT