செய்திகள்

'கரோனா காலத்தில் பெண்களிடையே குறைந்த கற்றல், வேலைத்திறன்'

DIN

கரோனா தொற்றுநோய் காலத்தில் கற்றல் மற்றும் வேலைத்திறனில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

'ஸ்டெம்' என்ற கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது. 

இந்த காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வோரில் ஆண்களை விட பெண்கள் குறைவான நேரமே பணிபுரிகின்றனர். மேலும் அவர்களது கற்றல் திறனும் பெருவாரியாக இல்லை என்று ஆய்வு குறிப்பிடுகிறது. 

காரணம் அவர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் வேலைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கொண்ட வேலை செய்யும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரத்தில் ஆண்களில் பெரும்பாலாக இந்த மாற்றம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் வழக்கம்போல தங்கள் பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் தெரியவந்துள்ளன. 

அதேபோன்று பேரிடர் காலத்தில் குழந்தைகளின் கற்றல்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT