செய்திகள்

கரோனா காலத்தில் துப்பாக்கி அதிகம் வாங்கும் அமெரிக்கர்கள்! தற்கொலை எண்ணம் காரணமா?

DIN

அமெரிக்காவில் தொற்றுநோய் காலத்தில் துப்பாக்கி வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் புதிதாக துப்பாக்கி வாங்கும் நபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது. 

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், கரோனா தொற்றுநோய்களின்போது துப்பாக்கியை வாங்கியவர்களில் 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாள் முழுவதும் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்தாகவும், முன்னதாக வாங்கியவர்களில் 37 சதவீதம் பேர் தற்கொலை எண்ணத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகக்கூடிய கவலையால் அவர்கள் துப்பாக்கியை வாங்க உந்தப்பட்டிருக்கலாம் என்று நியூ ஜெர்சி துப்பாக்கி (வன்முறை) ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநரும், ரட்ஜர்ஸ் ஸ்கூல் ஆஃப் அசோசியேட் பேராசிரியருமான மைக்கேல் அனெஸ்டிஸ் கூறினார். 

மேலும், 'இந்த ஆய்வின் முடிவுகள் தற்கொலை விகிதங்களின் அதிகரிப்பு குறித்து உறுதியாக கூற முடியாவிட்டாலும், கரோனாவின்போது வாங்கிய துப்பாக்கிகள் தொற்றுநோய்க்குப் பின்னரும் அவர்களிடம் இருக்கும் என்பது ஆபத்துதான் என்பதை உறுதியாகக் கூற முடியும்' என்றார். 

அனெஸ்டிஸின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 25 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் முதல்முறையாக துப்பாக்கி வாங்கியுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப எழுச்சி காலத்தில், அதாவது மார்ச் 2020ல் மட்டும் 20 லட்சம் துப்பாக்கிகள் வாங்கப்பட்டன.

கரோனாவுக்கு முன்னதாக துப்பாக்கி வாங்கியவர்களுக்கு பொதுவாக தற்கொலை எண்ணம் வர வாய்ப்பில்லை. ஆனால், கரோனா காலத்தில் வாங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பே இத்தகைய பயத்தை ஏற்படுத்துகிறது என்று அனெஸ்டிஸ் தெரிவிக்கிறார். 

இந்த ஆய்வில் 3,500 அமெரிக்கர்கள் பங்கேற்றனர். கரோனாவுக்கு முன் துப்பாக்கி வைத்திருந்தவர்கள், தொற்றுநோய் காலத்தில் துப்பாக்கி வாங்கியவர்கள், துப்பாக்கி வைத்திருக்காதோர் என மூன்று பிரிவுகளில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்ட முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

தொற்றுநோய்களின் போது துப்பாக்கியை வாங்கியவர்களில், 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாள் முழுவதும் தற்கொலை எண்ணங்களை அனுபவித்திருக்கிறார்கள். 56 சதவீதம் பேர் முந்தைய ஆண்டில் தற்கொலை எண்ணங்களை அனுபவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் கடந்த மாதத்தில் ,மட்டும் தற்கொலை எண்ணம் வந்துள்ளதாக தெரிவித்தனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுநோய் காலத்தில் துப்பாக்கிகளை வாங்காத நபர்கள் மேற்குறிப்பிட்ட மூன்று கால கட்டங்களில் முறையே 56 சதவீதம், 24 சதவீதம் மற்றும் 12 சதவீதம் பேர் மட்டுமே தற்கொலை எண்ணம் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 

அதாவது, கரோனாவுக்கு முந்தைய காலத்தில் தற்கொலை எண்ணம் கொண்டிருந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. 

துப்பாக்கிக் கொள்முதல் அதிகரிப்பு என்பது துப்பாக்கிகளைக் கொண்ட வீடுகளில் தற்கொலைக்கு மூன்று மடங்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதோடு, கைத்துப்பாக்கி வாங்கிய உடனேயே ஒரு நபரின் தற்கொலை அபாயம் நூறு மடங்கு அதிகரிக்கிறது என்றும் அனெஸ்டிஸ் தெரிவிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT