செய்திகள்

குளிர்கால சரும வறட்சியை நீக்கும் எளிய முறைகள்!

11th Nov 2020 04:51 PM

ADVERTISEMENT

குளிர்காலம் தொடங்கிவிட்டது. இப்பருவத்தில் குளிர்ந்த காற்றானது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, வறண்ட சருமத்தை ஏற்படுத்தும். இந்த சரும வறட்சியினால் பெண்கள் பலரும் இந்நேரத்தில் அவதிப்படுவர். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே இதனை எளிதாக சரிசெய்ய முடியும். 

முதலில் அதிகமான தண்ணீர் குடிப்பதை எப்போதும் வழக்கத்தில் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் சருமம் நீரேற்றத்துடன் இருக்கும். மேலும், பழச்சாறு மூலமாகவும் உடலில் தண்ணீர்ச் சத்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

இதுதவிர சரும வறட்சியைப் போக்க கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

1. வறண்ட சருமத்திற்கு அனைத்து வகையான எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆலிவ், பாதாம், வைட்டமின் ஈ எண்ணெய்களை இரவில் தூங்கும் முன் முகத்தில் அப்ளை செய்துவிட்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவு, பாசிப்பயறு மாவு கொண்டு கழுவலாம். இவை இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெயை தடவுங்கள். 

ADVERTISEMENT

2. பால் முகத்திற்கு நல்ல ஈரப்பதம் அளிக்கக்கூடியது. பசும்பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம். 

3. கற்றாழை ஜெல் அனைத்து வகையான சருமப் பிரச்னைக்கும் ஒரு நல்ல தீர்வு. 

3. முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர், தேன் கலந்து பேக் போன்று முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நேரில் கழுவலாம். 

4. பாலைப் போன்று தயிரும் முகத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கக்கூடியது. தயிருடன் சிறு துளிகள் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்து வாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

5. அவோகேடா பழம், மாம்பழம், வாழைப்பழம், பப்பாளிப்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து முகத்தில் தொடர்ந்து தவிர வறட்சி நீங்குவதோடு, முகம் பளபளப்பாக இருக்கும். 

 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT