செய்திகள்

உணர்ச்சிகளை மறைக்கும் முகக்கவசங்கள்!

25th Dec 2020 01:47 PM

ADVERTISEMENT

சுமார் கடந்த ஓராண்டாக முகக்கவசங்கள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கரோனா பெருந்தொடரிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் ஒரே வழியாக இந்த முகக்கவசங்களே இருக்கின்றன. உலகில் உருமாறிய கரோனா வைரஸ் என பெருந்தொற்று காலத்தின் இரண்டாம் பாகமும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முகக்கவசங்கள் இன்னும் சில மாதங்களுக்கு நம்முடன் தொடர்ந்து பயணிக்கவுள்ளன. 

இந்த முகக்கவசங்கள் அணிவதால் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்பதைத் தாண்டி இதனால் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு என்ன சிக்கல்கள் ஏற்படுகிறது என கனடாவின் பென்-குரியன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில சுவாரசியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதில் முதலாவது முகக்கவசம் அணிந்தவர்களை அடையாளம் காண்பது. முகக்கவசம் அணிவதால் நன்றாகத் தெரிந்தவர்களைக் கூட அடையாளம் காண முடிவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோன்று இரண்டாவதாக முக உணர்ச்சிகளை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக கண்களைப் பார்த்து பேசினாலும் முக பாவனைகளை முழுமையாக காண முடிவதில்லை. இதனால் தகவல் தொடர்பும் சற்று பாதிக்கப்படுகிறது. முக அங்கீகாரத்தில் புதிய பரிணாமம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

500 பேர் கொண்ட ஒரு பெரிய குழுவுடன் ஆன்லைனில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முகக்கவசம் அணிந்த ஒருவரை அடையாளம் காண்பதற்கான விகிதம் 15% குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் நமக்கு தெரிந்தவர்கள் அடையாளம் காண முஐடியாமல் போகலாம். இதுவரை அறிமுகமில்லாதவர்கள் சிலர் தெரிந்தவர் போல் தோன்றலாம் என்கிறார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் காலியா அவிடன் தெரிவிக்கிறார். 

முகக்கவசங்கள் மனித வாழ்வில் முக்கியபொருளாக மாறியுள்ளதால் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் சமூக மற்றும் உளவியல் தாக்கங்களை ஆராய வேண்டும் என்று ஆய்வாளர் கணெல் கூறுகிறார்.

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT