செய்திகள்

'இந்தியாவில் 10ல் 9 பேர் வீட்டிலிருந்து பணிபுரிய விரும்புகின்றனர்'

DIN

இந்தியாவில் 10 ஊழியர்களில் ஒன்பது பேர் சரியான தொழில்நுட்ப வசதி இருக்கும்பட்சத்தில் நீண்ட காலம் தங்கள் வீடுகளிலிருந்து பணிபுரியத் தயாராக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. 

பணிக்கான சாதனங்கள் அல்லது கருவிகள், நிறுவனத்துடன் தொடர்புகொள்ள தொலைநிலை அணுகல் மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் ஆகியவை ஊழியர்கள் விரும்பும், மிகவும் தேவைப்படும் தொழில்நுட்ப வசதிகள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால், கரோனா பொதுமுடக்க காலத்தில் சரியான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றனர். 

மேலும் நிறுவனத்தில் மூத்த அன்பவம் கொண்டவர்கள், மெய்நிகர் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திறன் உள்ளிட்டவற்றை இளம் தலைமுறையினருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

2020 ஆம் ஆண்டின் புதிய பணிச் சூழ்நிலை, நிறுவனத்தை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும், பணிகளை எந்த சூழ்நிலையிலும் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்று கற்றுக்கொடுத்துள்ளதாக டெல் டெக்னாலஜிஸ் குழுமத்தின் மூத்த இயக்குநரும் பொது மேலாளருமான இந்திரஜித் பெல்கண்டி தெரிவித்துள்ளார்.

ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் (ஏபிஜே) பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியா தொலைதூரப் பணிகளில் சிறந்து விளங்குகிறது. 

தொலைதூரத்தில் பணியாற்றிய ஊழியர்களில் அதிக சதவீதம் உள்ள முதல் மூன்று நாடுகளாக இந்தியா (85 சதவீதம்), இந்தோனேசியா (75 சதவீதம்) மற்றும் ஜப்பான் (72 சதவீதம்) என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் பிராந்தியத்தில் இருந்து 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து 1,000 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT