செய்திகள்

எடை அதிகரிப்பை ஒப்புக்கொள்ளாத உடல் பருமன் கொண்டவர்கள்: ஆய்வு

10th Dec 2020 02:01 PM

ADVERTISEMENT

உடல் பருமன் கொண்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை உடல் எடை கொண்டவர்களாக கருதுவதில்லை என்று சிகாகோ மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் மூலமாக கூறியுள்ளனர். 

அமெரிக்காவின் தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமெரிக்காவில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் அதிக எடை கொண்டவர்கள் என்றும் இதில் 10 சதவீதத்தினர் தங்களை உடல் எடை கொண்டவர்களாக கருதவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உடல் எடை கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் இன்டர்னல் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

சிகாகோ மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமன் உடையவர்களிடம் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். உடல் பருமன் கொண்ட மூத்தவர்களிடையே உடல் பருமன் குறித்த சுய விழிப்புணர்வு மற்றும் எடை குறைப்பு முயற்சிகளையும் ஆராய்ந்தனர்.

ADVERTISEMENT

ஆனால், ஆய்வில் பங்கேற்றவர்களில் கணிசமானவர்கள் தாங்கள் குண்டாக இருப்பதை ஒத்துக்கொள்ளவில்லை. உடல் பருமனை ஒரு பிரச்னையாகவே அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

உடல் பருமன் உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைக்க முயற்சிப்பது அமெரிக்க மக்களிடையே மிகவும் குறைவாக இருக்கிறது. இது எதிர்காலத்தில் உடல் பருமன் கொண்டவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது. 

மேலும், சுகாதாரக் காப்பீடு கொண்டிருப்பதும் உடல் பருமன் குறித்த அலட்சியத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. 

Tags : obesity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT